மஜக பொதுச் செயலாளருடன் SDPI தலைவர்கள் சந்திப்பு…

image

image

சென்னை.ஜூன்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை MLA விடுதியில் SDPI கட்சியின் தலைவர் ஜனாப்.தெஹ்லான் பாகவி அவர்கள் தனது சக நிர்வாகிகளுடன் வருகை தந்து சந்தித்தார்.

பொதுச் செயலாளரின்
உடல் நலன் விசாரித்தவர், பொதுவாழ்வில் ஏற்படும் துன்பங்களை தைரியத்துடன் கடந்து போகவேண்டும் என்றும் உற்சாகமூட்டி பேசினார்.

முக்கால் மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும், சமுதாய பணிகள் குறித்தும் நல்லெண்ண அடிப்படையில் கருத்துகள் பறிமாறப்பட்டது.

இச் சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
சென்னை
#MJK_IT_WING
15.06.2017