அக்.04,
தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவா சத்திரத்தில் வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற கோரியும், பாபர் மசூதியை இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்தும், உ.பி யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வையும் கண்டித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை கோரி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை ஸ்மார்ட் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை சேக், சமூக ஆர்வலர் அதிரை சாகுல் ஹமீது கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் சேதுபாவாசத்திரம் கிளை செயலாளர் சலிம், பொருளாளர் யூசுப், துணைச்செயலாளர்கள் ராவுத்தர், சஹாபுதீன், செய்யது இப்றாஹிம், ஆலிம்.நூரூல் அமீன், மல்லிப்பட்டினம் நகர செயலர் ஹுமாயூன் கபீர், அதிரை நகர செயலர் அப்துல் சமது, நிர்வாகிகள் மர்ஜூக், ஹக், நபில் உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.