வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நெல்லை மஜகவினர் போராட்டம்…! மாட்டு வண்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்!


நெல்லை.அக்.04.,

விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் கறுப்பு சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த 25-09-2020 முதல் 02-10-2020 வரை தொடர் போராட்டங்களை நடத்தியது.

ஒதன் ஒரு நிகழ்வாக நெல்லை மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பேட்டை நகர பொருளாளர் D.அசன்கனி தலைமை தாங்க, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேட்டை நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்டம் செயலாளர் கரிசல்சுரேஷ், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, விவசாய சங்க தலைவர் S.முத்துமாரி, மஜக மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டத்தால் ஏற்பட உள்ள ஆபத்துகள் குறித்தும் உரையாற்றினர்.

இப்போராட்டத்தில் மஜகவினர் பலர் மாட்டு வண்டிகளில் ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக பேட்டை நகர மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் நன்றியுரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் பேட்டை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் N.அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் நாகூர்மீரான், மருத்துவ சேவை அணி செயலாளர் புகாரி, வழக்கறிஞர் அணி செயலாளர் மன்சூர் அலி, இளைஞர் அணி செயலாளர் ஜமீண், நெல்லை பகுதி செயலாளர் கலீல், பேட்டை நகர செயலாளர் இரா.முத்துக்குமார் மற்றும் தமீம் அன்சாரி, A1 காயல் மைதீன், பீர், நெல்லை ஜாஹிர், இஸ்மாயில், அலாவுதீன், ரவி, ஐடிஐ சங்கர், ஹபிபுல்லாஹ், சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள், தோழமை கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
04-10-2020