குமரி மாவட்ட மஜக பயிலரங்கம்!

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முதன்மை நிர்வாகிகளுக்கான மக்களுடன் மஜக குறித்த பயிலரங்கம் கோட்டாரில் மாவட்ட செயலாளர் பிஜுருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் மக்களுடன் மஜக செயல்திட்டங்களின் கோணம் குறித்து எடுத்துரைத்து பயிலரங்கத்தை துவக்கி வைத்தார்.

பிறகு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் நாஞ்சில் ஜெய் அவர்கள் மக்களுடன் மஜகவை எந்த வடிவில் முன்னெடுக்கலாம் என்றும், மக்களின் குரலாய் நாம் மாறுவது குறித்தும், அரசு நலத்திட்டங்கள் குறித்தும், அதை வென்றெடுப்பது குறித்தும், எந்தெந்த அதிகாரிகள் மூலம் பிரச்சினைகளை அணுகலாம் என்பது குறித்தும் வகுப்பு எடுத்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து அவர் விரிவாக பேசினார்.

இது மக்களுடன் மஜக திட்டங்களை சிறப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்தது.

வரும் ஜனவரி 26 குடியரசு தின விழாவில் கிராம சபா, பகுதி சபா கூட்டங்களில் பங்கேற்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்டச் செயலாளர் பிஜுருல் ஹபீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரஹ்மான், அமீர்கான், ரசூல், ஐயப்பன், IT WING மாவட்ட செயலாளர் K.S. ரபீக், MJTS மாவட்ட செயலாளர் முகம்மது ராபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அசரப் அலி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி அலங்காரம், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் பாரிஸ், மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், துணை செயலாளர் செய்யது முகம்மது, பொருளாளர் வேல்முருகன், மாநகர இளைஞரணி செயலாளர் மாஜித், துணை செயலாளர் அபுதாஹிர், மாநகர MJTS செயலாளர் ஷேக், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் எம்.எச் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.