You are here

திருவிதங்கோடு முஸ்லிம் கலை௧் கல்லூரி மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்கள் நல்லெண்ண வருகை..

திருவிதாங்கோடில் சிறப்பாக செயல்படும் முஸ்லிம் கலைக் கல்லூரிக்கு மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று நல்லெண்ண வருகை தந்தார்.

அவருடன் மாநில துணைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர் லயன் எச்.முகமது அலி அவர்கள் வரவேற்று உபசரித்தார்.

பிறகு தாளாளர் முகம்மது அலி அவர்கள், முனைவர் பாலசுப்பிரமணியன் எழுதிய “இஸ்லாம் தமிழுக்கு தந்த அருட்கொடை” என்ற நூலை பொதுச்செயலாளருக்கு வழங்கினார்.

பள்ளிவளர்ச்சி, பாடத்திட்டங்கள், மாணவ செல்வங்களை குறித்து தாளாளர் அவர்கள் எடுத்துரைத்தார்.

இக்கல்லூரியில் ஏற்கனவே ஒரு முறை வருகை தந்து பொதுச்செயலாளர், தாளாளர் உடன் உரை ஆற்றிய தாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

அப்போது சமூக செயற்பாட்டாளர் இரவிபுதூர் கடை காதர் முகைதீன் அவர்களும் உடன் இருந்தார்,

இதில் மாவட்ட செயலாளர் பிஜுருல் ஹபீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலர்கள் முஜிப் ரஹ்மான், அமீர்கான், ரசூல், ஐயப்பன்,IT WING மாவட்ட செயலாளர் K.S. ரபீக், MJTS மாவட்ட செயலாளர் முகம்மது ராபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அசரப் அலி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி அலங்காரம், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் பாரிஸ், மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், துணை செயலாளர் செய்யது முகம்மது, பொருளாளர் வேல்முருகன், மாநகர இளைஞரணி செயலாளர் மாஜித், துணை செயலாளர் அபுதாஹிர் , மாநகர MJTS செயலாளர் ஷேக், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் எம் எச் சாகுல், கலந்து கொண்டனர்.

Top