கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு கேரளாபுறத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நல்லெண்ண வருகை புரிந்தார்.
16-வது வார்டு மஜக கவுன்சிலரான பவுசியா அவர்கள் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார்.
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துதல், பள்ளி வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் தலைமை ஆசிரியை திருமதி லட்சுமி அவர்கள், ஆசிரியை ஜாக்குலின் அவர்களும் பல்வேறு கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மஜக சார்பில் மாணவர்களுக்கு கணிணி ஏற்பாடு செய்து தருவதாகவும், MP, MLA நிதி மூலம் கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு செய்வதாகவும் பொதுச்செயலாளர் கூறினார்.
பிறகு மஜக கவுன்சிலர் பவுசியா தனது வார்டில் உள்ள பகுதிகளுக்கு பொதுச்செயலாளர் அவர்களை அழைத்து சென்று மக்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்தார்.
மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட செயலாளர் பிஜுருல் ஹபீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலர்கள் முஜிப் ரஹ்மான், அமீர்கான், ரசூல், ஐயப்பன்,IT WING மாவட்ட செயலாளர் K.S. ரபீக், MJTS மாவட்ட செயலாளர் முகம்மது ராபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அசரப் அலி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி அலங்காரம், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் பாரிஸ், மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், துணை செயலாளர் செய்யது முகம்மது, பொருளாளர் வேல்முருகன், மாநகர இளைஞரணி செயலாளர் மாஜித், துணை செயலாளர் அபுதாஹிர் , மாநகர MJTS செயலாளர் ஷேக், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் எம் எச் சாகுல், கலந்து கொண்டனர்.