ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… மஜக ஆதரவு யாருக்கு? கோட்டாரில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

கல்வி மேம்பாடு, தொழில் வளர்ச்சி, வணிக உறவு, நல்லிணக்கம், கூட்டுறவு ஆகியவற்றை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு (TMJF) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் குமரி மாவட்ட அலுவலத்தை கோட்டாறில் இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்.

பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

அதில் ஊடகவியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவு யாருக்கு? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்தவர், இம்மாத இறுதியில் எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட உள்ளது. அதில் இது குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்றார்.

தொடர்ந்து TMJF சார்பில் கலந்துரையாடலும் நடைப்பெற்றது.

அதில் குமரி மாவட்ட சூழலுக்கு ஏற்ப நல்லிணக்கப் பணிகளை முன் எடுப்பது குறித்தும், கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு குறித்தும், யதார்த்தங்களுடன் கள நிலவரங்களை அணுகுவது குறித்தும் தனது ஆலோசனைகளை பொதுச் செயலாளர் கூறினார்.

அவை யாவும் நடைமுறைக்கு சாத்தியமான கருத்துகள் என பலரும் அவற்றை வரவேற்றனர்.

இந்நிகழ்வுகளுக்கு TMJF தலைவர் ஜனாப் P. ஹிமாம் பாதுஷா தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் மாவட்டச் செயலாளர் பிஜுருல் ஹபீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலர்கள் முஜிப் ரஹ்மான், அமீர்கான், ரசூல், IT WING மாவட்ட செயலாளர் K.S. ரபீக், MJTS மாவட்ட செயலாளர் முகம்மது ராபி, மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் பாரிஸ், மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், துணை செயலாளர் செய்யது முகம்மது, பொருளாளர் வேல்முருகன், மாநகர இளைஞரணி செயலாளர் மாஜித், துணை செயலாளர் அபுதாஹிர் கலந்து கொண்டனர்.