You are here

MJVS மாநில செயலாளர் யூசுப்ராஜா இல்ல மணவிழா! மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!


அக்.04,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வர்த்தகர் பிரிவான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் N.E.M.யூசுப் ராஜா அவர்களின் மகனார் யாக்கூப் மணாளருக்கும், இஜ்ஜத் மணாளிக்கும் திருமணம் அய்யம்பேட்டையில் அக்.01 அன்று நடைப்பெற்றது.

மஜக மாவட்ட மருத்துவ சேவை அணியின் சார்பில் அணியின் மாவட்ட செயலாளர் முஹம்மது அலி தலைமையில் வருகை தந்த விருந்தினர்களுக்கு கபசுர குடிநீர், முககவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டு தனிநபர் இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

இதில் மஜக மாநில செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லாஹ், பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது இப்ராகிம், சோழபுரம் பாரூக், இப்ராகிம் ஷா மற்றும் மாவட்ட அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.

Top