விவசாய கறுப்புச்சட்டங்களை கண்டித்து இராஜபாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!


அக்.04.,

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்ட ராஜ பாளையத்தில் மாவட்ட செயலாளர் கண்மனி காதர், அவர்கள் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக
விருது நகர் விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, மஜக தலைமை கழக பேச்சாளர் வாவை இனாயத்துல்லாஹ், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் விருதுநகர் மாவட்ட மாணவர் இந்தியா மாவட்ட பொறுப்பாளர் எம்.எம் இப்ராஹீம், ஸ்ரீவில்லி புத்தூர் நகர செயலாளர் ஷாஜ ஹான்,ராஜபாளையம் விவசாய அணி பொறுப்பாளர் பெரியசாமி, சிவகாசி நகர செயலாளர் சந்தோஷ்குமார், ராஜபாளையம் நகர துணைச் செயலாளர் பஷீர், அப்துல் வகாப், ராஜபாளையம் கிளைச் செயலாளர் சம்சுதீன், அவர்களும் ராஜபாளைய ஒன்றிய நிர்வாகிகள் முரம்பு,முத்து வேல், மற்றும் திரளோனார் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
04.10.2020