கன்னியாகுமரியில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!


நாகர்கோவில்
அக்டோபர். 04,

மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட், போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேஸ்வரன் தாஸ், அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி, ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், ஃபையாஸ் அஹமத், வழக்கறிஞர் தோழர். ஐயப்பன், ஆகியோர் இச்சட்டங்களின் பாதிப்புகளை குறித்து கண்டன உரையாற்றினர்.

இறுதியில் மாநகரச் செயலாளர் அமீர்கான், நன்றி உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பெண்கள், உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
03.10.2020