திண்டுக்கல்.ஜுன்.16.,நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் ஆயக்கூடியில் கொடி ஏற்றும் விழா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் U .மரைக்காயர் சேட், இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கட்சியின் புதிய கொடியை மாநில துணைசெயலாளர் திண்டுக்கல் M.அன்சாரிஅவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் வானவில் காதர் அவர்கள், கொள்கை விளக்க அணி மாநில துணைசெயலார் C.A.சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் S .ஜாபர் , R .உமர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.பிர்தெளஸ், இளைஞரனி ஒன்றிய செயலாளர் A J .ஜவகர், ஒன்றிய செயலாளர் A.ராஜா முகமது, நகர செயலாளர் சையது காதர் மற்றும் பழனி ஆயக்குடி, பாலசமுத்திரம் மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக ஆயக்குடியில் மஜகவின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, அதிகபடியாக கிளைகள் அமைத்து கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவுசெய்யபட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 16/06/2017
தமிழகம்
தமிழகம்
கல்வி மானிய கோரிக்கையில் இதுவரை பேசப்படாத கருத்துக்களை முன் வைத்து சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் சிறப்புரை!
சென்னை.ஜூன்.15., நேற்று பள்ளி கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை விவாதங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துகொண்டு பேசினார். வாழ்வில் அவதூறுகளும், துன்பங்களும், துயரங்களும் முற்றுகையிடும்போது நநம்பிக்கையும், தைரியமும் தேவை. இறைவனின் அருளும், நேர்மையான என்னங்களும், சிறந்த கல்வியும் இணையும்போது அவற்றை எல்லாம் முறியடிக்கும் வலிமையை பெறுகிறோம் என்றார். புனித ரமலான் நோன்பை கடைபிடித்த நிலையில் இந்த மாமன்றத்தில் பேசுகின்றேன் என்றவர், இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திப்பதாக கூறினார். பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செய்துவரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ப்ளஸ் டூவீல் ரேங் முறையை ஒழித்தது, இந்த ஆண்டில் பள்ளிக்கூடம் தொடங்கிய அன்றே பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு இறுதியாண்டு தேர்வு தேதிகளை அறிவித்தது ஆகியவற்றை பாராட்டினார். மேலும் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு தேர்வு அறிவித்திருப்பது குறித்து திமுக உறுப்பினர் பொன்முடி கூறிய விசயத்தை தனது பேச்சில் சுட்டிக்காட்டிவர், அதில் சாதகம் அதிகமிருந்தால் செயல் படுத்துங்கள் பாதகம் இருந்தால் விட்டுவிடுங்கள் என்றார். நிலா நிலா ஓடிவா, பாடலில் திரிபு செய்யப்பட்ட மத வார்த்தைகளை நீக்கவேண்டும், யோகாவை
திருமுருகன், பேரா. ஜெயராமன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்…! முதல்வருக்கு தமிமுன் அன்சாரி, தனியரசு நேரில் கடிதம்…!!
சென்னை.ஜூன்.15., இன்று சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போது காலையில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் சந்தித்தனர். அப்போது மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதும், மீத்தேன் எடுப்புக்கு எதிராக போராடி வரும் பேரா. ஜெயராமன் மீதும் போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தி பேசினார்கள். நேற்றைய தினம் இது குறித்து இருவரும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சென்னை. #MJK_IT_WING 15.06.2017
இரத்த தானம்: மஜக மாநில செயலாளரை பாராட்டி விருது வழங்கிய கலெக்டர்…
தஞ்சை.ஜூன்.15., நேற்று 14-6-2017 இரத்த தானம் தினம். கடந்த காலங்களில் மனிதநேய ஐனநாயக கட்சி சார்பாக பல இடங்களில் இரத்த தான முகாம் நடத்தப் பட்டது. இதற்காக சிறப்பாக செயல்பட்டதற்காக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உயர்திரு.அண்ணாதுரை அவர்களால் மஜக மாநில செயலாளர் H.ராசுதீன் அவர்களுக்கு பாராட்டு மற்றும் விருது (அவார்ட்) வழங்கி கவுரவித்தது. இந்நிகழ்ச்சி தஞ்சை மீனாட்சி மிசன் ஹாஸ்பிடலால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தஞ்சை மாவட்டம். #MJK_IT_WING 15.06.2017
மஜக பொதுச் செயலாளருடன் SDPI தலைவர்கள் சந்திப்பு…
சென்னை.ஜூன்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை MLA விடுதியில் SDPI கட்சியின் தலைவர் ஜனாப்.தெஹ்லான் பாகவி அவர்கள் தனது சக நிர்வாகிகளுடன் வருகை தந்து சந்தித்தார். பொதுச் செயலாளரின் உடல் நலன் விசாரித்தவர், பொதுவாழ்வில் ஏற்படும் துன்பங்களை தைரியத்துடன் கடந்து போகவேண்டும் என்றும் உற்சாகமூட்டி பேசினார். முக்கால் மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும், சமுதாய பணிகள் குறித்தும் நல்லெண்ண அடிப்படையில் கருத்துகள் பறிமாறப்பட்டது. இச் சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சென்னை #MJK_IT_WING 15.06.2017