காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்...! கவிக்கோ. அப்துல் ரஹ்மான் பெயரில் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும்...!! சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை ! (சட்டசபையில் 15.06.17 அன்று கல்வி மானியக் கோரிக்கையில் பேசிய உரையின் பாகம் - 1) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே....! தமிழ் நாட்டின் ரவீந்திரநாத் தாகூராகவும் , கவி அல்லமா இக்பாலாகவும் , தமிழ் நாட்டின் வெல்வியாகவும் வாழ்ந்த கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த 02.06.17 அன்று மரணமடைந்தார். உலக கவிதைகளை தமிழுக்கு தந்தவர். தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். அவர்தான் ஹைகூ, சர்ரியலிச வடிவ கவிதைகளை தமிழுக்கு தந்தவர். அவரை சிறப்பிக்கும் பொருட்டாக, சென்னை பல்கலைக் கழகத்தில் நவீன தமிழ் கவிதைகளுக்கான உயர் ஆய்வு இருக்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்கு 1 கோடி ரூபாய் செலவாகும். இது ஒரு பிரச்சனை எனில், தமிழக அரசு 50 லட்ச ரூபாயை ஒதுக்கினால், மீதி 50 லட்ச ரூபாயை கவிக்கோ ஆதரவாளர்கள், சமூக பிரமுகர்களிடம் பெற நான் முயற்சி செய்கிறேன். இதற்கு தமிழக அரசு ஏற்பாடு
தமிழகம்
தமிழகம்
மஜக மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது கோவை வருகை..! பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு..!!
கோவை.ஜூன்.16., இன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி குனியமுத்தூர் தெற்கு பகுதி துணைசெயலாளர் ஜமேஷா அவர்கள் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிவூன்...) அவரது நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க மஜக பொருளாளர் SS.ஹாருண் ரஷீது கோவை வந்தார்கள், நல்லடக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு கடந்த வாரம் கோவை G.M.நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சல்மான் மற்றும் சக்கீலாபானு அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். பின்பு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சுல்தான்அமீர், மாவட்ட பொருளாளர் ATRபதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஜாபர்,சபீர், Gmநகர் அக்பர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்!!! தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 16.06.2017
காயல் நகர மஜக சார்பில் நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்வு…
தூத்துக்குடி.ஜூன்.16., இன்று காயல்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி மிகசிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜீப் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், மாவட்ட துணைச் செயலாளர் ஜபருல்லாஹ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் இதில் மாவட்ட நிர்வாகிகள், காயல் நகர நிர்வாகிகள், ஆத்தூர் நகர நிர்வாகிகள், மேலும் SDPI, காக்கும் கரங்கள், நடப்பது என்ன வாட்ஸ்அப் குழும நிர்வாகிகள் மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தூத்துக்குடி மாவட்டம், #MJK_IT_WING 16.06.2017
நாகூர் மாடர்ன் பள்ளிக்கூடத்தில் இஃப்தார் நிகழ்ச்சி M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு !
நாகூரில் பிரபல வளைகுடா தொழிலதிபர் ஷேக் தாவுது மரைக்காயர் அவர்களின் மாடர்ன் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடத்தில் இன்று நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று சிறப்பித்தார் . இதில் ஜனாப் . ஷேக் தாவுத் மரைக்காயர் , முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் , வழக்கறிஞர் . பரமானந்தம் , ஆடிட்டர் குமரவேல் , பாடகர் தேரிழந்தூர் தாஜூதீன் , மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் . தாஜுதீன் , மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட ஆய்வாளார் மணிமேகலை , ஆடிட்டர் குமாரவேல் , SPl தாசில்தார் தமிமுன் அன்சாரி , அதிரை அரபிக் கல்லூரி முதல்வர் ஜெய்னுலாபுதீன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 16.06.2017
மஜக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை ஆலோசனை கூட்டம்…
திருவாரூர்.ஜூன்.16., நேற்று 15/06/2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதக்குடி கிளையின் ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் ஜமால் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் PMA. சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, குவைத் மண்டல கிளை செயலாளர் யூசுப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்வரும் 18/06/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மஜக பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.MLA அவர்கள் பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை மற்றும் பொதக்குடி அமீரகம் ஜமாத் இணைந்து நடத்தும் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சியின் கலந்து கொள்ள இருக்கிறார். ஆகையால் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. அதில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு சில தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #ⓂJK_IT_WING திருவாரூர் மாவட்டம் 16.06.2017