திருவாரூர்.ஜூன்.16., நேற்று 15/06/2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதக்குடி கிளையின் ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் ஜமால் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் PMA. சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, குவைத் மண்டல கிளை செயலாளர் யூசுப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 18/06/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மஜக பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.MLA அவர்கள் பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை மற்றும் பொதக்குடி அமீரகம் ஜமாத் இணைந்து நடத்தும் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சியின் கலந்து கொள்ள இருக்கிறார். ஆகையால் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
அதில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு சில தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது…
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#ⓂJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்
16.06.2017