கோவை நிவாரண நிதி தொடர்பான ஒரு வழக்கில் பேரா. ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட தமுமுக தலைவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை என தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். அவ்விஷயத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்து, வெற்றி பெறுவார்கள் என நம்புகிறோம். அவர்கள் தைரியத்தோடு சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வெற்றிபெற இறைவனிடம் பிரர்த்திக்கிறோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 19.06.2017
தமிழகம்
தமிழகம்
தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பில் கண்டன கூட்டம்…! மஜக பங்கேற்பு…!!
தூத்துக்குடி.ஜூன்.19.,நேற்று 18.06.2017 மாலை 7மணிக்கு தூத்துக்குடியில் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பாக கதிராமங்கலத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சி விற்பனையில் தடையை திரும்பப்பெற கோரியும், திருமுருகன் காந்தி உள்ளிட்ட சகோதரர்கள் அனைவரின் விடுதலை செய்யக்கோரியும் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி (தெ) மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தூத்துக்குடி (தெ) மாவட்டம். #MJK_IT_WING 18.06.2017
மஜக வேலூர் (கி) மாவட்டம் சார்பில் (இஃப்தார்) நோன்பு துறப்பு நிகழ்ச்சி ! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…!
வேலூர்.ஜூன்.19., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று 18-06-2017 இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது M.Com, இணைப் பொதுச்செயலாளர் மவ்லவி மதுரை மைதீன் உலவி, அவைத் தலைவர் நாசர் உமரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். மேலும் மாவட்ட அமைப்புக்குழு நிர்வாகிகள், பகுதி,கிளை நிர்வாகிகள் மற்று மனிதநேய சொந்தங்கள் ஜமாத்தார்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வேலூர் (கி) மாவட்டம் 18.06.2017
பொதக்குடியில் ஜமாத்தார் ஏற்பாட்டில் இஃப்தார் நிகழ்ச்சி! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
திருவாரூர்.ஜூன்.19., திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் ஜமாத்தினர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று 18.06.2017 மாலை நடந்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A. MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள். மேலும் மதர் இந்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் VRN.பன்னீர் செல்வம் அவர்களும், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு சமூகங்களை சேர்ந்த பெரியவர்களும் வருகை தந்தனர். அப்பகுதி மஜக சார்பில் அனைவருக்கும் கேக் பைகள் வழங்கப்பட்டது. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திருவாரூர் மாவட்டம், #MJK_IT_WING 18.06.2017
CPM அலுவலகம் தாக்கப்பட்டது மதவெறியின் தொடர்ச்சி! மஜக கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை) கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை தொடர்ந்து முன்னெடுத்து வரும் CPM கட்சியின் நடவடிக்கைகளை பொறுக்க முடியாத மதவெறி சக்திகள், தங்களது வழக்கமான வன்முறையை கையில் எடுத்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் அரசியல் வன்முறைகள் பெருக இடம் அளிக்க கூடாது. இவ்விஷயத்தில் தமிழக மக்கள் உறுதியான மனநிலையில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 18/06/2017