பொதக்குடியில் ஜமாத்தார் ஏற்பாட்டில் இஃப்தார் நிகழ்ச்சி! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

image

image

திருவாரூர்.ஜூன்.19., திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் ஜமாத்தினர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று 18.06.2017 மாலை நடந்தது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A. MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள்.

மேலும் மதர் இந்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் VRN.பன்னீர் செல்வம் அவர்களும், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு சமூகங்களை சேர்ந்த பெரியவர்களும் வருகை தந்தனர்.

அப்பகுதி மஜக சார்பில் அனைவருக்கும் கேக் பைகள் வழங்கப்பட்டது.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
திருவாரூர் மாவட்டம்,
#MJK_IT_WING
18.06.2017