திருச்சி.ஜூலை.14., இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காதர் பள்ளிவாசலில் ஜமாத்தினரின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வருகை புரிந்தார். அங்கு சமுகநல்லிணக்கம் குறித்து ஜூம்மா உரை நிகழ்த்தினார். அவருடன் திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, து.செயலாளர் ஷேக்தாவூத், ரஃபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING 14.07.2017
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி ஆலோசனைக் கூட்டம்!
கோவை.ஜூலை.14., நேற்று கோவை மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரபீக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்கால அரசியல் குறித்தும் நாம் செயல்படவேண்டிய முறைகள் குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்வில். இம்தியாஸ், ஆத்துப்பாலம் அபு, ஷாஜகான் மற்றும் பகுதி கிளைகழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சகோதரர் ஒருவர் தம்மை மஜகவில் இணைத்துக் கொண்டார். இக்கூட்டத்தின் முடிவுகள். 21.07.17 வெள்ளி அன்று மஜக கிணத்துக்கடவு பகுதிசார்பாக 15 இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 13.07.2017
ஊத்துக்குளியில் மஜக சார்பில் இரத்த பரிசோதனை முகாம்…
திருப்பூர்.ஜுலை.14., நேற்று முன்தினம் புதன்கிழமை கடந்த ஆண்டுகள் போல் இந்த ஆண்டும் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊத்துக்குளி கிளையின் சார்பாக அரசு நூற்றாண்டு விழா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இரத்த வகையை கண்டறியும் விதமாக இரத்த பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.! இந்த நிகழ்வில் மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் M.காதர் கான். மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் மாவட்ட பொருளாளர். S.A.முஸ்தாக் அஹமது அவர்கள். இளைஞரணி துணைச் செயலாளர் S.அபுதாஹீர் அவர்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபில் ரிஸ்வான் அவர்கள் மற்றும் மீரான், ஊத்துக்குளி நிர்வாகிகள் S.சாகுல் ஹமீது அவர்களும், சாதிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் மஜக வின் நிகழ்சியை பாராட்டியவர்கள். சில கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தனர்..! தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருப்பூர் மாவட்டம். 13.07.2017
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தலைமை அலுவலகம் திறப்பு..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு…!!
சென்னை.ஜூலை.14., சென்னை நுங்கம் பாக்கத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தலைமை அலுவலகம் நேற்று 13.07.2017 காலை 11மணியளவில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தனியரசு MLA அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மஜக மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமிம் அகமது மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி அவர்களும், மாவட்ட விவசாய சங்க தலைவர்களும் கலந்துகொண்டார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி. சென்னை. 13.07.2017
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம்! சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA அதிரடி கோரிக்கை!
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம்! நேரத்தை வீணாக்ககூடாது! சட்டமன்றத்தை நீண்ட நேரம் நடத்த வேண்டும்! சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA அதிரடி கோரிக்கை! இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசினார். பல உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச விரும்புகின்றனர். எனவே 9 மணிக்கு சட்டமன்றத்தை தொடங்கி, மதியம் வரை நடத்த வேண்டும். பிறகு மாலையிலும் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைப் போல நடத்த வேண்டும் என்றார். அதுபோல உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய தேவையற்ற விஷயங்களை பேசாமல், உருப்படியாக மைய்யக் கருத்துக்களை பேசி நேரத்தை வீண்டிக்காமல் பயண்படுத்த வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை நினைவூட்டுவிதமாக அதிரடியாக பேசியதும், அவையே மௌனமாக விட்டது. மேலும் கூட்டத்தொடர் நடக்கும் போது, MLA-க்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க மாலை நேரங்களில் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவைகளையும் நடத்த வேண்டும் என்றதும் உறுப்பினர்கள் மேஜையை தட்டினர். நல்ல திரைப்படங்களுக்கு, இயக்குனர்களுக்கு விருதுகளை வழங்க வேண்டும். அந்த வகையில் கவண், ஜோக்கர் படங்களுக்கும் விருதுகளை வழங்க வேண்டும் என்று கூறி திறமைமிக்க இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டார். NEET தேர்வுக்கு தற்காலிக மாற்று தீர்வு, ஹைட்ரோகார்பன்-மீத்தேன் குறித்த