கோவை.ஜூலை.14., நேற்று கோவை மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரபீக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்கால அரசியல் குறித்தும் நாம் செயல்படவேண்டிய முறைகள் குறித்தும் உரையாற்றினார்.
இந்நிகழ்வில். இம்தியாஸ், ஆத்துப்பாலம் அபு, ஷாஜகான் மற்றும் பகுதி கிளைகழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சகோதரர் ஒருவர் தம்மை மஜகவில் இணைத்துக் கொண்டார்.
இக்கூட்டத்தின் முடிவுகள்.
21.07.17 வெள்ளி அன்று மஜக கிணத்துக்கடவு பகுதிசார்பாக 15 இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
13.07.2017