மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுடன்!! தென்காசி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

ஆக;01.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை தென்காசி மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் வருகின்ற செப்டம்பர் 10 அன்று ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலைக்காக சென்னையில் நடைபெற உள்ள தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திரட்டுவது, உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு மாநில பொருளாளர் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
31.07.2022