கோவை.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமி யகலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், EBR.இப்ராஹீம் மற்றும் அனைத்து பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆகஸ்ட் 13.08.17அன்று பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவில் அதிகமான மக்கள் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 யூனிட் இரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15 அன்று கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் மாபெரும் மருத்துவமுகாம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.07.17
தமிழகம்
தமிழகம்
காயல்பட்டினம் மஜக நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தூத்துக்குடி.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர ஆலோசனை கூட்டம் கடந்த 30.07.2017 மாலை 5 மணியளவில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி அவர்கள் கலந்து கொண்டு புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். தீர்மானங்கள்.. #எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி இரத்ததானம் செய்வது. வரும் 19 ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தரும் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களை வைத்து நகர, கிளைகள் சார்பாக கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING தூத்துக்குடி (தெற்கு) 30.07.2017
தோப்புத்துறை ஹம்தான் திருமணத்தில் மஜக தலைவர்கள் ஒன்று கூடல்…
வேதாரண்யம்.ஜூலை.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிவரும் மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ்வின் தம்பி பொறியாளர் ஹம்தான் அவர்களின் திருமணம் நேற்று (30.07.2017) தோப்புத்துறையில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க மஜக தலைவர்கள் தோப்புத்துறைக்கு வருகை தந்தனர். இந்த திருமண நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர். இதில் மஜக பொருளாளர் SS.ஹாரூண் ரசீது , தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் , இணை பொதுச் செயலாளர் மைதீன் உலவி , துணை பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், தைமிய்யா, ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் திண்டுக்கல் அன்சாரி, புதுமடம் அனீஸ், சமீம் அகமது , மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ் , தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் வானவில் காதர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் கலந்து
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுடன் நாகை MLA சந்திப்பு !
நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்த 8 மீனவர்களை கடந்த வாரம் இலங்கை ராணுவம் கைது செய்து சிறை வைத்திருக்கிறது . இன்று ஆரிய நாட்டுத் தெருவுக்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு நாகை MLA ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளையும் வழங்கினார். ஆரிய நாட்டுத் தெரு மற்றும் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிறுப்பதாகவும் விரைவில் விடுதலை சாத்தியமாகும் என்றும் M.தமிமுன் அன்சாரி MLA கூறினார். கடந்த வாரம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த இலங்கை சிறையிலிருக்கும் 8 மீனவர்களின் குடும்பத்தையும் சந்தித்து M.தமிமுன் அன்சாரி MLA ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழக்கியது குறிப்பிடத்தக்கது. தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 26.07.17
திண்டுக்கல் மாவட்டம் அரசு பள்ளிக்கூடத்திற்கு மஜக -சார்பில் நாற்காலி வழங்கப்பட்டது.
திண்டுக்கல், ஜூலை.31., முன்பு வாக்குறுதி அளித்ததின் பெயரில் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பூச்சிநாயக்கன் பட்டியில் உள்ள அரசு பள்ளிகூடத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாற்காலிகள் (சேர்கள்) இன்று வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, நகர பொறுப்பு குழு தலைவர் B.காதர் ஒலி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்னும் சில தினங்களில் மீதமுள்ள ( மைக்செட் ) பொருட்களை பள்ளிக்கூட நிர்வாகத்திடம் கொடுக்கபடும். தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்டம் #MJK_IT_WING 31/07/2017