(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வோம் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்ததற்கு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. அதே சமயம் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் அமலுக்கு வருவது குறித்து எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்திய அரசு மெளனம் காக்கிறது இதை கண்டிக்கிறோம். மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு ரேஷனில் வழங்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு மானியத்தை குறைப்பது என்றும், அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்பதும் கிராமப்புற மக்களையும், நகர்ப்புற ஏழை மக்களையும் வெகுவாக பாதிக்கும் எனவே இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் ரேஷன் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான முன்னோட்ட சதித்திட்டம் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் எள்ளளவும் மாற்றமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 01.08.2017
தமிழகம்
தமிழகம்
இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் சிறையில் உயிருக்கு போராடி வரும் திண்டுக்கல் மீரான் மைதீன் சிறுநீரகம் தர முன்வந்த மஜக சகோதரன்.
திண்டுக்கல்.ஆக.01., சிறையில் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் கைதி திண்டுக்கல் மீரான் மைதீன். அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன் வருபவரை, மதுரை மத்தியச் சிறை சூப்பிரண்டு முன் ஆஜரப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற (மதுரை கிளை) (H.C.R(M D)NO.1115/2017) 15/03/2017.அன்று உத்தரவு பிரப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மதுரை மத்தியச் சிறை துணை ஜெயிலர் முன் திண்டுக்கல் மீரான் அவர்களுக்கு சிறுநீரக தானம் செய்ய உள்ள சகோதரர் மீரான் மைதீன் அவர்கள் குடும்பத்தாருடன் ஆஜரானார். விபரங்களை கேட்டறிந்த துணை ஜெயிலர், அரசாங்கத்தின் பார்வைக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் முறையாக அளிப்பதாகக் கூறினார். இந்நிகழ்வின்போது மஜக இணைப் பொதுச் செயலாளர் KM. முகம்மது மைதீன் உலவி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A. ஹபீபுல்லா, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அஹ்மது அப்துல்லா, தின்டுக்கல் மாநகரப் பொறுப்புக் குழு தலைவர் B. காதர்ஒலி, சிறைவாசி திண்டுக்கல் மீரான் அவர்களின் சகோதரர், அவரின் மனைவி உடன் இருந்தனர். கிட்னி பாதிப்பால் உயிர்க்கு போராடும் மீரான் மைதீன் அவர்களுக்கு.இறைவனிடம் மட்டும் இதற்கான கூலியை எதிர்பார்த்தவராக,,, தனது கிட்னியில் ஒன்றை வழங்க முடிவு செய்துள்ள இந்த சகோதரருக்கு அனைத்தையும் அறிந்த ஏக இறைவன்
மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கியது நன்கொடை சேகரிப்பு ! நாகையில் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார் !
நாகை. ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் நிதி வளர்ச்சிக்காக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நாகப்பட்டினத்தில் தொழிலதிபர் ஜனாப் மெய்தின் அவர்களை சந்தித்து, அவரிடம் நன்கொடை பெற்று இத்திட்டத்தை பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார். துண்டு பிரசுரத்தை தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா M.நாசர் அவர்கள் வழங்கி, ரசீதையும் அவரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநிலச் துனைச்செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லாஹ் , மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்றனர். நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நாகை நகர நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம் 01.08.2017
காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.ஆக.01., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. நேற்று இந்நிகழ்விற்கு அழைப்பு கொடுப்பதற்காக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான் ஆகியோருடன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணை செயலாளர் பிரோஸ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். இதில் காவல்துறை ஆணையர், துணைஆணையர், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு மருத்துவமனை RMO மற்றும் இரத்தவங்கி அதிகாரிகளை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்!!! தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT _WING கோவை மாநகர் மாவட்டம் 31.07.17
வடகரையில் புதிய பேருந்து நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA திறந்துவைத்து, மரக் கன்றுகள் நாட்டுவைத்தார்கள்
நாகை. ஆக.01., நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் புதிய பேருந்து பயணிகள் நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் திறந்து வைத்தார். பிறகு பேருந்து நிழலகம் அருகில் மரக்கன்றுகளை நட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர். பிறகு வடகரை கிளை சார்பாக கழக கொடியை புதிய பேருந்து நிழலகம் அருகிலும், தென்கரை பாலம் அருகிலும் கழக பொதுச் செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மஜக நாகை மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி முஹம்மத் யூசுப் தீன், தொகுதி செயலாளர் தம்ஜிதீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர் ரஹ்மான், குவைத் மண்டல துணை செயலாளர் எம்.முஹம்மத் பாசில் கான், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சித்திக் அவர்களும் மற்றும் ஏனங்குடி, வவ்வாலடி, கோட்டூர், வடகரை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, நாகை மாவட்டம். #MJK_IT_WING