You are here

வடகரையில் புதிய பேருந்து நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA திறந்துவைத்து, மரக் கன்றுகள் நாட்டுவைத்தார்கள்

image

image

image

நாகை. ஆக.01., நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் புதிய பேருந்து பயணிகள் நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் திறந்து வைத்தார். பிறகு பேருந்து நிழலகம் அருகில் மரக்கன்றுகளை நட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிறகு வடகரை கிளை சார்பாக கழக கொடியை புதிய பேருந்து நிழலகம் அருகிலும், தென்கரை பாலம் அருகிலும் கழக பொதுச் செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மஜக நாகை மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி முஹம்மத் யூசுப் தீன், தொகுதி செயலாளர் தம்ஜிதீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர் ரஹ்மான், குவைத் மண்டல துணை செயலாளர் எம்.முஹம்மத் பாசில் கான், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சித்திக் அவர்களும் மற்றும் ஏனங்குடி, வவ்வாலடி, கோட்டூர், வடகரை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
நாகை மாவட்டம்.
#MJK_IT_WING

Top