உணவு பாதுகாப்பு விதிகள் எளிய மக்களுக்கு எதிரானது…! மஜக கடும் கண்டனம்…!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வோம் என்று மத்திய அரசு அறிவிப்பு  செய்ததற்கு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது.

அதே சமயம் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் அமலுக்கு வருவது குறித்து எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்திய அரசு மெளனம் காக்கிறது இதை கண்டிக்கிறோம்.

மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு ரேஷனில் வழங்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு மானியத்தை குறைப்பது என்றும், அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்பதும் கிராமப்புற மக்களையும், நகர்ப்புற ஏழை மக்களையும் வெகுவாக பாதிக்கும் எனவே இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு கட்டத்தில் ரேஷன் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான முன்னோட்ட சதித்திட்டம் என்பதில் ஐயமில்லை.

அதே சமயம், தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் எள்ளளவும் மாற்றமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
01.08.2017