உமறுப்புலவருக்கு விழா! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் நன்றி…

image

சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார்.

அவருக்கு வருடம் தோறும் தமிழக அரசு விழா எடுக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்துமாறு எட்டயபுரத்தை சேர்ந்த உமறுப்புலவர் சங்கத்தினர் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம் கோரிக்கை வைத்தனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களும் இதை வலியுறுத்தினார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இக்கோரிக்கையை M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வலியுறுத்து பேசினார். முதல்வரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தமிழக அரசு உமறுப்புலவருக்கு வருடந்தோறும் அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்தது.

இதற்கு நன்றி தெரிவித்து முதல்வரை சந்திக்க, உமறுப்புலவர் சங்கம், இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகியவற்றின் சார்பில், மஜக பொதுச் செயலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

முன் கூட்டியே  திட்டமிடப்பட்ட நிகழ்வில்  பங்கேற்க விருப்பதால் தன்னால் வர இயலாது என தெரிவித்தார்.

இந்நிலையில் தனது கோரிக்கையை ஏற்று உமறுப்புலவருக்கு அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு மஜக பொதுச் செயலாளர் அவர்கள் நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.

தகவல;

மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
03.08.2017