
நாகை. ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் நிதி வளர்ச்சிக்காக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று நாகப்பட்டினத்தில் தொழிலதிபர் ஜனாப் மெய்தின் அவர்களை சந்தித்து, அவரிடம் நன்கொடை பெற்று இத்திட்டத்தை பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.
துண்டு பிரசுரத்தை தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா M.நாசர் அவர்கள் வழங்கி, ரசீதையும் அவரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநிலச் துனைச்செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லாஹ் , மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்றனர்.
நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நாகை நகர நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
நாகை தெற்கு மாவட்டம்
01.08.2017