இராமநாதபுரம்.ஆக.06., இன்று இராமநாதபுரம் ஐக்கிய ஜமாத் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எமனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பரமக்குடி வட்டார ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். இதில் மஜக பொருளாளர் S.S.ஹாரூன் ரசீது, இணை பொதுச் செயலாளர் K.M.மைதீன் உலவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நிறைவாக பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள். "பண்மை சமூக அமைப்பில் சிறுபான்மையினர் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொள்வது" என்று விரிவாகவும், ஆழமாகவும் பேசினார். பிறகு ஜமாத்தார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வை இராமநாதபுரம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஜனாப்.ஆலம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மஜக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர், நகர செயலாளர் நகர ஹபீப் ரஹ்மான் ஆகியோருடன் மஜக நிர்வாகிகள் உட்பட திரளான ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING இராமநாதபுரம் மாவட்டம். 06.08.2017
தமிழகம்
தமிழகம்
தஞ்சை வடக்கு நாச்சியார்கோயில் மஜக புதிய கிளை உதயம்!
தஞ்சை.ஆக.05., தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் நேற்று வெள்ளி மாலை 4.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் தலைமையில் புதிய கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயளாலர் ராசுதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃருப் அவர்களும் முன்னிலை வகிக்க, தமாம் மண்டல பொருளாளர் ஹாஜ் முஹம்மது மற்றும் சவூதி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் உஸ்மான் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் திருநறையூர் மற்றும் நாச்சியார்கோயில் கிளை நிர்வாகிகளை ஒருமனதான தேர்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மஜகவின் மாவட்ட , அணி , ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தகவல்; மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 04.08.2017
ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்! மஜக கடும் கண்டனம்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை) #காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவர் #திரு_ராகுல்_காந்தி அவர்கள் குஜராத்தில் மழை - வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற போது , அவரது கார் மீது நடத்திய கல்லெறித்தாக்குதலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு ஆறுதல் கூற வந்த ஒரு தேசிய தலைவரை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி, பிரதமர் மோடியை வாழ்த்தி தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு கேவலமான அரசியலாகும். இதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் எதிர்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளும், மக்கள் நல செயல்பாடுகளும் முடக்கப்படுவதன் தொடர்ச்சியாகவே இச்செயலை பார்க்க முடிகிறது. பா ஜ க உள்ளிட்ட காவி மதவாத சக்திகளிடம் அரசியல் சகிப்புத்தன்மையும், நாகரீகமும், பொறுமையும் குறைந்து வருவதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், ஒரு பெரிய கட்சியின் தேசிய தலைவருக்கே, பாதுகாப்பற்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதற்கு நாட்டை ஆளும் பா ஜ க வின் செயல்பாடுகள் தான் காரணமாகும். அரசியல் வன்முறைகளுக்கு
கம்பம் மஜக அலுவலகத்திற்கு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வருகை..!
தேனி.ஆக.05., நேற்று (04/08/2017) தமிழக - கேரளா எல்லை பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வருகை தந்த மாண்புமிகு தமிழக வருவாய் துறை அமைச்சர் R.B.உதயகுமார் அவர்களும், தேனிமாவட்ட செயலாலாளரும் ஆன்டிபட்டி சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ் செல்வன் அவர்களும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் S.T.K.ஜக்கையன் அவர்களும், தேனி மாவட்ட கம்பம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்க்கு வருகைதந்தனர். அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்களும் , மாநில செயற்க்குழு உறுப்பினர் கரிம் அவர்களும், துணை செயலாளர்களான காதர், ஜின்னா ஆகியோரும், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், பொருளாளர் அசிக் கனி , இளைஞரணி காஜா, மருத்துவரணி லியாகத் அலி, புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் நகர உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்ப்பு கொடுத்தனர். அதற்க்கு நன்றி கூறிய மாண்புமிகு அமைச்சர் R.B.உதயகுமார் அவர்கள் "நீங்கள் தமிமுன் அன்சாரி என்ற அருமையான சுய நலமற்ற தலைவரை பெற்றுள்ளீர்கள்" உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி புன்னகையுடன் விடைபெற்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 04.08.2017
வேலூர் கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனைக் கூட்டம்…!
வேலூர்.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானீ ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வேலூர் மாநகரத்தில் உள்ள கிளைகளை மறுசீரமைக்கப்படவேண்டும் என்றும், பல புதிய கிளைகள் அமைக்கப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் வேலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரங்களில் (ஆர்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, விஷாரம் மற்றும் பல) இடங்களில் மஜக வலுப்படுத்தவேண்டும் என்றும் ஏகமனதோடு தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது, டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கியுள்ளதால் இதை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மஜக சார்பாக வழங்குவது. மேலும் வேலூர் மாநகரில் உள்ள பொது மக்களின் அன்றாட பிரச்சனைகளை கண்டறிந்து அரசின் வாயிலாக தீர்த்து வைப்பது. இந்த அனைத்து தீர்மானங்களும் குறிப்பிட்ட நாட்களில் மிக விரைவாக