நாகை. ஆக.15.,71 வது சுந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் தமிழகமெங்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தேசிய கொடியேற்றல், மரக்கன்றுகள் நடல், ரத்ததான முகாம்கள், மருத்து சேவை நிகழ்ச்சிகள் என மஜகவினர் கொண்டாடினர். மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள், நாகை கலெக்டர் அலுவகத்தில் நடைப்பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறகு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முழக்கங்களுக்கு இடையே சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். பிறகு நாகை புதுத்தெருவில் காயிதேமில்லத் நற்பணி மன்றம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நாகை நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு யாஹுசைன் பள்ளித்தெரு வில் மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சியில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றினார். பிறகு நாகூரில், நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளியில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றி, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பிறகு விடுதலைப் போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர் தெருவில் இளைஞர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு அவர்களது
தமிழகம்
தமிழகம்
வேலூர் (கி) மாவட்ட மஜக சார்பாக தேசிய கொடி ஏற்றம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!
வேலூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இந்திய திருநாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்ஸர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார். முதற்கட்டமாக, காலை 8.00 மணியளவில் காட்பாடி 1வது வார்டு கிளையின் சார்பாகவும், அடுத்தபடியாக, காலை 9.00 மணியளவில் R.N.பாளையம் 53வது வார்டு கிளையின் சார்பாகவும், தேசிய கொடியை மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் ஏற்றி வைத்தார். அடுத்தகட்டமாக காலை 9.30 மணியளவில் 31 வது வார்டு B.T.C. ரோட்டிலும், காலை 10.00 மணியளவில் 56 வது வார்டு கொணவட்டத்திலும், தேசிய கொடியை மாவட்ட அமைப்புக்குழு தலைவர் ஏற்றிவைத்தார். மஜகவின் வாழ்த்து முழக்கத்தை மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் கூறினார். பிறகு பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம், பென்சில் இனிப்பு வழங்கப்பட்டது இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் யாசீன், ஜாகிர் உசேன், சையத் உசேன். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி, மற்றும் 1வது வார்டு, 53வது வார்டு கிளைகளின் நிர்வாகிகள், மற்றும் மாநகரின் பல பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக
எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
திணடு்க்கல்.ஆகஸ்ட்.15., இன்று 71-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் நினைபடுத்தியும், பாசிச பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது. பேருந்துகளில் சென்றவர்கள் அனைவருக்கும் தேசிய கொடி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர் பொறுப்பு குழு நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள், பள்ளிக்கூட மாணவிகள், கூலி தொழிலாளர்கள், பொது மக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திண்டுக்கல் மாவட்டம். 15/08/2017.
மஜக சார்பில் திருச்சி மாவட்ட அலுவலகம் மற்றும் வார்டுகளில் 71வது இந்திய சுதந்திர தினவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி..!
திருச்சி.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி காஜாமலை மாவட்ட அலுவலகத்தில் 71வது இந்திய சுதந்திர தினவிழா நடைபெற்றது. மதவெறியை சாதிவெறியை பயங்கரவாத பெருநோயை வேரறுப்போம்..!வேரறுப்போம்...!! அன்பை விதைத்து, அமைதி காத்து, வேற்றுமறந்து, ஒற்றுமை பேணி, வளமிக்க தாயகத்தை ஒன்றுபட்டு கட்டமைப்போம்.. என்ற முழக்கத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியேற்றி வைத்தார்கள். மற்றும் மஜக காட்டூர் 62வது வார்டிலும் வார்டு செயலாளர் அபுபக்கர் சித்திக், துணை செயலாளர் புரோஸ்கான் தலைமையில் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தேசிய மூவர்ண கொடியேற்றினார். மஜக அரியமங்கலம் 7வது வார்டிலும் வார்டு செயலாளர் அக்பர், பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ஜம் ஜம் பஷீர் தேசிய மூவர்ண கொடியேற்றினார். மற்றும் மஜக ஆழ்வார் தோப்பு 49வது வார்டிலும் வார்டு செயலாளர் பக்கீர் மொய்தீன், பொருளாளர் அப்துல் காதர், துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மொய்தீன் அப்துல்காதர் அவர்கள் தேசிய மூவர்ண கொடியேற்றினார். உடன் மஜக மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, துணைச் செயலாளர்கள் ரபீக், ஷேக்தாவூத், மஜக தொழில் சங்கம் மாவட்ட செயலாளர் G.K.காதர், துணைச் செயலாளர்கள் சம்சுதீன், அயூப்கான்
மஜக தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றம்…
சென்னை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் 71 வது சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா M.sc. அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புறையாறினார். சுதந்திர தின முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டு சுதந்திர தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இதில் மாநிலத் துணைச் செயலாளர்களான புதுமடம் அணீஸ், சைபுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளான தாஹா, அன்வர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மல்லாஹ் கான், துணைச் செயலாளர் பீர் முஹம்மது, வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணிச் செயலாளர் மூஸா, திருவள்ளூர் கி மாவட்ட பொருளாளர் ஜாபர் உட்பட நிர்வாகிகள் மற்றும் மனிதநேயச் சொந்தங்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தலைமையகம்_சென்னை 15.08.17