தலைவர்களை திரையரங்குகளில் தேடாதீர்கள்… மனிதம் குறும்பட வெளியீட்டு விழாவில் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!


டிச 31,

தோப்புத்துறையை சேர்ந்த பல சமூக இளம் மாணவர்கள் MIC TEST என்ற பெயரில் குழுவாக இயங்கி குறும்படங்களை கடந்த ஒராண்டுகளாக தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

இன்று ‘ மனிதம் ‘ என்ற பெயரில் எடுத்த குறும்படத்தை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் போதே சமூக அக்கறை குறித்த பொறுப்புணர்வோடு குறும்படங்களை எடுத்து வருவதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

இப்போதைய படைப்புகளில் கலை கொலை செய்யப்படுவதாக வருந்தியவர், பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி சமூகத்தை பழுது பார்ப்பதற்கான ஒன்றாகவும் கலை இருக்க வேண்டும் என்றார்.

தோப்புத்துறையை சுற்றி உள்ள இயற்கை எழில் மிகு கிராமங்கள் உங்களின் கலைப்பயணத்திற்கு ஊக்கமளிக்கும் என்றவர், சதைக்கு முன்னுரிமை தராமல் கதைக்கு முன்னுரிமை தரும் படங்களை நீங்கள் எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்றார்.

நல்ல படங்களை ஆதரிப்பதாக கூறிய அவர், கலையில் நுழைந்தவுடன் அரசியல் ஆசை சிலருக்கு வந்து விடுகிறது என்று சாடினார்.

திரையரங்குகளில் தலைவர்களை தேடாமல், களத்தில் மக்களுக்காக உழைப்பவர்களை தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் கவிஞர் புயல் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, மைக் டெஸ்ட் குழுவில் உள்ள இம்தியாஸ், நிஷாந்த், துரை அரசன், வினோத் ராஜ், அனஸ், சுதர்சன், ரிஸ்வான், நவீன்ராஜ், ரத்னகுமார், நிதிஷ், ஆகாஷ், கனிமொழி ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

இதில் ஆசிரியர்கள் வை.சுவாமிநாதன், ரங்கசாமி, தமிழ்செல்வன், வ. கண்ணையன், கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்..

நாகூரான், ஷேக் அகமதுல்லா, வீரப்பன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
31-12-2020