திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரை‌ ஆதரித்து மஜகவினர் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம்!


சென்னை.மார்ச்.24.,

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திரு.கே.என்.நேரு அவர்களை ஆதரித்து மேற்கு தொகுதிக்குட்பட்ட தென்னூர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் தலைமையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆங்காங்கே கடைகள் மற்றும் மசூதிகளின் முன்பு கூடியிருந்த மக்களிடையே மஜக-வின் கொள்கை முடிவுகள் குறித்தும், வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பிரச்சாரத்தில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, சேக் அப்துல்லா, முகமது பீர்ஷா மற்றும் தர்கா பாரூக் நிர்வாகிகள் சேக் தாவூத்,சதாம் உசேன், அன்வர்தீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElection2021
#MJK2021
#திருச்சி
23.03.2021