சத்தியமங்கலத்தில் மஜக நகர அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாருன் ரசீது திறந்து வைத்தார்!


ஈரோடு:டிச.31.,

ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலக திறப்பு விழா நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் சையது அகமது பாரூக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கலந்து கொண்டு நகர அலுவலகத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக் கிடையே கட்சி கொடியினை பொருளாளர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆசிப், பாபுலால், சாகுல் அமீது, நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் நகர பொருளாளர் சையது அலி, துணை செயலாளர் முகமது அலி, முகம்மது சமீர், இனிய அமானுல்லா, இளைஞரணி செயலாளர் முகமது ரபிக், மருத்துவ சேவை அணி செயலாளர் ஆசிக், வர்த்தக அணி செயலாளர் ரசூல், பொருளாளர் பஷீர், மனித உரிமை அணி செயலாளர் சரிப், மாணவர் இந்தியா ஒன்றிய செயலாளர் முகமது சாதிக், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
31.12.2020