ஆயங்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி!!


டிச.31,
கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் எழுச்சியோடு நடைப்பெற்றது.

முன்னதாக அப்பகுதியில் கட்சியின் கொடியினை மாவட்ட செயலாளர் O.R. ஜாகீர் ஹூசைன் ஏற்றி வைத்தார்.

இம்முகாமில் திரளானோர் பங்கேற்று தங்களை மஜக வின் புதிய உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இதில் மாவட்ட பொருளாளரும், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவருமான பஜில் முஹம்மது, கத்தார் மண்டல செயலாளர் யாசின், நகர செயலாளர் புருஹானுதீன், துணை செயலாளர் அன்வர், குவைத் மண்டல நிர்வாகி யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.