நாகை. ஆக.15.,71 வது சுந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் தமிழகமெங்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தேசிய கொடியேற்றல், மரக்கன்றுகள் நடல், ரத்ததான முகாம்கள், மருத்து சேவை நிகழ்ச்சிகள் என மஜகவினர் கொண்டாடினர்.
மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M. தமிமுன் அன்சாரி அவர்கள், நாகை கலெக்டர் அலுவகத்தில் நடைப்பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிறகு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முழக்கங்களுக்கு இடையே சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
பிறகு நாகை புதுத்தெருவில் காயிதேமில்லத் நற்பணி மன்றம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நாகை நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு யாஹுசைன் பள்ளித்தெரு வில் மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சியில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றினார்.
பிறகு நாகூரில், நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளியில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றி, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பிறகு விடுதலைப் போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர் தெருவில் இளைஞர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு அவர்களது பணிகளுக்கு வாழ்த்துக்ககளைக் கூறினார்.
பிறகு திருமருகல் கிராமத்திற்க்கு வந்து அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சுதந்திர தின உரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பிறகு தனது தொகுதி நிதியிலிருந்து அப்பள்ளிக்கூடத்திற்க்கு 8 லட்சம் ரூபாயில் கலையரங்கம் கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.
அதன்பிறகு புறாக்கிராமம் சென்றார். அங்கு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தை மேல்நிலைப் பள்ளிக்கூடமாக மாற்றி கொடுத்ததற்க்கு ஆசிரியர்களும், ஊர் மக்களும் தெரிவித்தப் பாராட்டுகளையும், நன்றிகளையும் ஏற்றுக்கொண்டார்.
அங்கு தனது தொகுதி நிதியிலிருந்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் சைக்கிள் நிறுத்துமிடம் கட்ட 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அறிவித்தார்.
தொடர்ந்து ஆங்காங்கே தொகுதி மக்களை வழிநெடுகிலும் சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
15.08.17.