#நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்!
#நாகூர்_தர்ஹா சொத்துக்களை கண்டறிய வேண்டும்!
#சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்!
(#மஜக_பொதுச்_செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற உரை- பகுதி 4)
பேரவை தலைவர் அவர்களே …
#மீன்வள_பல்கலைக்கழகம்
நாகப்பட்டினம் தொகுதியில் கட்டப்பட்டு வரும் மீன்வள பல்கலைக்கழகத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
#அரசு_மருத்துவமனை
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு DNP அந்தஸ்து தர வேண்டும். நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென்ற எனது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .
(DNP அந்தஸ்து கிடைத்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தொடரின் போது MRI ஸ்கேன் வசதிகள் உள்பட 9 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே)
#துறைமுகம்
நாகப்பட்டினம் துறைமுகத்தை தனியார் பங்கேற்போடு பசுமைத் துறைமுகமாக ரூ.350 கோடிக்கு தரம் உயர்த்தி செயல்படுத்தப்படும் என்று அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது விதி 110-ன் கீழ் அறிவித்தார்கள். எனவே , அந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் .
#தனி_தாலுக்கா
திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் . அதை தனி தாலுக்கா வாக அறிவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் .
#தீயணைப்பு_நிலையம்
நாகப்பட்டினத்திலுள்ள தீயணைப்பு நிலைய கட்டடங்களை புதிதாக கட்டித்தரவேண்டும் .
#தடுப்பணை_தேவை
உத்தம சோழபுரம் , நரிமணம் அருகே வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி , தண்ணீர் கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும் .
#கடற்கரை_மேம்பாடு
#நாகப்பட்டினம் , நாகூர் கடற்கரையை மேம்படுத்த சுற்றுலாத் துறை சார்பில் தலா 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.
#நாகூர்_தர்ஹா
நாகூர் தர்ஹா பெயரில் தமிழகமெங்கும் உள்ள சொத்துக்களை தமிழக அரசு சொத்துப் பதிவேடு அ- மூலம் கண்டறிந்து , நாகூர் தர்ஹா நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘யாத்ரி நிவாஷ்’ என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள தர்ஹாக்களும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். நாகூரில் இருக்கக்கூடிய தர்ஹாவுக்கும் இத்திட்டம் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். இதையும் அரசு பரிசீலிக்க வேண்டும் .
#மதுக்கடை
நாகை இரயில் நிலையம் எதிரில் உள்ள மதுக்கடை மற்றும் நாகை திருமேனி செட்டித் தெருவிலுள்ள மதுக்கடை ஆகிய இரண்டு மதுக்கடைகளையும் மூட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் .
மேற்கண்ட 7 கோரிக்கைகளை கடந்த 13.07.2017அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார் .
#பதிவுகள்
ஏற்கனவே இக்கூட்டத்தொடரில் 22.06.2017 அன்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் குறித்தும் , அவர்களது படகுகளை மீட்பது குறித்தும் ,100 சதவீத மானியத்தில் அவர்களுக்கு படகுகளை வழங்குவது குறித்தும் பேசினார்.
கடந்த கூட்டத்தொடரில் 134 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனங்குடி ஏரியை தூர்வாருவது குறித்தும் விரிவாக பேசியதும் , இது குறித்து தமிழக முதல்வரிடமும் நேரில் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது .
மேலும் நாகை ஆரிய நாட்டுத்தெருவில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கு மீன்பிடி இறங்குதளம் அமைக்க அனுமதி கொடுத்ததற்கும் , நாகூர் வெட்டாற்றில் தடுப்பு சுவர் எழுப்ப ஒப்புதல் வழங்கியதற்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கும் நேரில் நன்றி தெரிவித்தார் .
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் கோரிக்கைகள் நமது சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களின் வாயிலாக சட்டமன்றத்தில் எதிரொலிப்பது தொகுதி மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
தொகுதி எங்கும் குளங்கள் , ஏரிகள் , வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது .
தகவல்:
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
17.07.2017