You are here

மஜக சார்பில் திருச்சி மாவட்ட அலுவலகம் மற்றும் வார்டுகளில் 71வது இந்திய சுதந்திர தினவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி..!

image

image

திருச்சி.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி காஜாமலை மாவட்ட அலுவலகத்தில் 71வது இந்திய சுதந்திர தினவிழா நடைபெற்றது.

மதவெறியை சாதிவெறியை பயங்கரவாத பெருநோயை
வேரறுப்போம்..!வேரறுப்போம்…!!
அன்பை விதைத்து, அமைதி காத்து, வேற்றுமறந்து, ஒற்றுமை பேணி, வளமிக்க தாயகத்தை ஒன்றுபட்டு கட்டமைப்போம்..
என்ற முழக்கத்தோடு

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியேற்றி வைத்தார்கள்.

மற்றும் மஜக காட்டூர் 62வது வார்டிலும் வார்டு செயலாளர் அபுபக்கர் சித்திக், துணை செயலாளர் புரோஸ்கான் தலைமையில் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தேசிய மூவர்ண கொடியேற்றினார்.

மஜக அரியமங்கலம் 7வது வார்டிலும் வார்டு செயலாளர் அக்பர், பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ஜம் ஜம் பஷீர் தேசிய
மூவர்ண கொடியேற்றினார்.

மற்றும் மஜக ஆழ்வார் தோப்பு 49வது வார்டிலும் வார்டு செயலாளர் பக்கீர் மொய்தீன், பொருளாளர் அப்துல் காதர், துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மொய்தீன் அப்துல்காதர் அவர்கள்
தேசிய மூவர்ண கொடியேற்றினார்.

உடன் மஜக மாவட்ட
பொருளாளர் அஷ்ரப் அலி, துணைச் செயலாளர்கள் ரபீக், ஷேக்தாவூத், மஜக தொழில் சங்கம் மாவட்ட செயலாளர் G.K.காதர், துணைச் செயலாளர்கள் சம்சுதீன், அயூப்கான் , மஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தென்னூர் சதாம், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சேட்,
கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள்
கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு
இனிப்புகள் வழங்கப்பட்டது.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருச்சி மாநகர் மாவட்டம்
15.08.2017.

Top