திருவாரூர்.ஆக.18., மஜகவின் சார்பில் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக ஆகஸ்ட், செப்டம்பம், அக்டோபர் மாதங்கள் அறிவிக்கப்படுள்ளது. நாகை (தெற்கு), ஈரோடு (மேற்கு), தஞ்சை (தெற்கு) மாவட்டங்களை தொடர்ந்து இன்று 18.08.17 திருவாரூர் மாவட்டத்தில் நன்கொடை சேகரிப்பு தொடங்கியது. பொதக்குடியில் இன்று மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி M.A. MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் பிரமுகர்கள், வணிகர்களை சந்தித்து மாவட்டத்தில் முதல் கட்ட வசூலை தொடங்கினார். இதில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, மாவட்ட வழக்கறிஞர் பூவரசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது கனி, கொரடாசேரி ஒன்றிய செயலாளர் காதர், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜியாவுதீன், பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முகம்மது ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 18.08.17
தமிழகம்
தமிழகம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…!
தூத்துக்குடி.ஆக.16., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொருலாளர் அ.நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர் M.காதர் பாட்ஷா, மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் S.முகம்மது ராபிக் முன்னிலையில் நடைபெற்றது. எதிர்வரும் 20.08.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு வருகைதரும் மாநில பொருலாளர் S.S.ஹாருன் ரசீது அவர்களை சிறப்பான முறையில் வரவேற்று கொடியேற்று விழாவையும் மாவட்ட சுற்றுப்பயணத்தையும் திட்டமிட்டபடி நடத்தவேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் செய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 16.08.17
மஜக சார்பில் திருவல்லிகேணியில் 71வது சுதந்திரதின விழா..! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
சென்னை.ஆக.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை திருவல்லிக்கேணியில் இந்திய தேசிய 71வது சுதந்திரதின விழா நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் சாதிக் பாஷா அவர்கள் மூவர்ண தேசிய கொடியேற்றி உணர்ச்சி ஊட்டும் முழக்கங்கள் முழங்கப்பட்டது. மாநில செயலாளர் N.A. தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கொடியேற்றிய பிறகு மாநில செயலாளர் தைமியா அவர்களின் சுதந்திர தின உரை அனைவரையும் உத்வேகபடுத்துவதாகவும், பிறகு இரண்டு புறாக்களுக்கு சுதந்திரம் கொடுத்து வானில் பறக்கவிட்டது உச்சகட்டமாக அமைந்து பொதுமக்களை கவர்ந்தது. அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந் நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக மாவட்ட பெருளாளர் M.Y.பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர்கள் M. H. பீர் முஹம்மத் மற்றும் ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் தாஹா, அன்வர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர், திருவல்லிகேணி பகுதி செயலாளர் பஷீர், பொருளாளர் அசன், துணை செயலாளர் முகம்மது அலி இஸ்ஹாக், நீலம் பாஷா
மஜக கோவை 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞரணி சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மாநில பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞரணி மற்றும் ஒன் கேர் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா மற்றும் மாவட்ட அணி பகுதி கிளைகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 15.08.17
மஜக கோவை மாவட்ட 71வது சுதந்திரதின கொடியேற்று விழா மாநில பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர், பூ மார்கெட், செல்வபுரம், கடைவீதி, ஒப்பணக்கார வீதி, கரும்புகடை, போத்தனூர் ரோடு ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. இதில் மஜக மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது, துணைப் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர் ஆகியோர் தேசியகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினர். மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 15.08.17