சென்னை.ஆக.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மடல்.. பெரு மதிப்பிற்கும், மரியாதைக்குரிய தோழர். தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு.. வணக்கம் தோழர். சென்னை மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு நடத்தமுயன்று கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையிட்டிருக்கும் நடவடிக்கை குறித்து தொடர்ந்து எதிர்பினை நீங்கள் பதிவு செய்து வருவது எங்களை போன்ற இளம் இயக்கத்திற்கு பெரும் ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இக்கைது குறித்து சட்டசபையில் கடந்த மாதம் (ஜுலை) கூட்டுத்தொடரில் தொடர்ந்து நீங்கள் எழுப்பி குரல் மிக முக்கியமானதும், ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாகும். எங்கள் விடுதலை மட்டுமல்லாமல் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் கொலைவழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஆயுட் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஒருமித்த கருத்தினை சட்டசபையில் கொண்டு வர பெருமுயற்சி எடுத்த உங்களுக்கும், உங்களுடன் இணைந்து நின்ற தோழர் தனியரசு MLA அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை உரித்தாக்க அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். சாமானிய மக்களின் மீதான அடக்குமுறை, அரசியல் சிறைவாசிகள் மீதான விடுதலை குறித்தான விவாதம் ஜனநாயக தன்மையோடு சட்ட சபையில்
தமிழகம்
தமிழகம்
கூம்பு வடிவ ஒலி பெருக்கி விவகாரத்தில் தடை ஆணை பெற்றுதந்த வழக்கறிஞர் ஷானவாஸ்கானுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!
கோவை.ஆகஸ்ட்.22., கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி 70 டெசிபில் அளவில்தான் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோவை சுற்றியுள்ள பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அதிலும் குறைவாக 30 முதல் 40 டெசிபில் அளவில்தான் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக காவல்துறையினர் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது போன்று , உத்தரவிற்கு மாறாக அத்துமீறி பள்ளிவாசலில் 30 முதல் 40 டெசிபில் என்ற குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அப்புறப்படுத்தி தொடர்ச்சியாக ஒருதலை பச்சமாக நடந்து வருகின்றனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவரும், வால்பாறை பார்கவுன்சில் தலைவருமான வழக்கறிஞர் ஷானாவாஸ் கான் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்டுத்துவதாகவும், காவல்துறை வேண்டுமென்றே பொய்யாக வழங்கு தொடர்ந்து இருப்பதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அப்புறப்படுத்தக்கூடாது என காவல்துறையின் நடவடிக்கைக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கூம்புவடிவ ஒலி பெருக்கி விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு தடை ஆணை பெற்றுதந்த வால்பாறை
மஜக தலைமை நியமன அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் (வடக்கு) நிர்வாகிகளாக கீழ்கண்டோர் அறிவிக்கப்படுகின்றனர். மாவட்டசெயலாளர் : K.செய்யது அலி த/பெ.காதர் ராவுத்தர் #2/1A, பள்ளிவாசல் மேலத்தெரு, கயத்தார், தூத்துகுடி வடக்கு மாவட்டம், அலைப்பேசி : 9487801567. மாவட்ட பொருளாளர் : A.மைதின் த/பெ.அப்துல்சலாம் 8/23நடுத்தெரு மானங்காத்தான் தூத்துகுடி வடக்கு மாவட்டம். அலைப்பேசி : 8220030076 இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் மனிதநேய சொந்தங்களும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவண், எம். தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 22-08-2017
சென்னை மாநகர கமிஷனருடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா சந்திப்பு..!
சென்னை.ஆக.22., வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாதுகாப்பை பலப்படுத்தக் கோரியும், ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையில் ஆடு, மாடு பலியிடுவது சம்பந்தமாகவும் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. சென்னை மாநகர கமிஷனர் A.K. விஸ்வநாதன் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்கள் சந்தித்து உரையாடினார். பின்னர் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அவருடன் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர்கள் பீர் முஹம்மத், ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், IKP மாவட்ட செயலாளர் வருசை கனி, துணை செயலாளர் ஜெய்னுலாபுதீன், துறைமுக பகுதி துணை செயலாளர் பஜார் அபூபக்கர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தலைமையகம், சென்னை 21.08.17
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இளையராஜா குடும்பத்திற்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…!!
சிவகங்கை.ஆகஸ்டு.21., ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜா ஆவார். கடந்த 13.08.2017 அன்று இந்திய எல்லையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சகோதரர் இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் இளையராஜாவின் தாயார், சகோதரி, மனைவி ஆகியோரிடம் ஆறுதல் கூறினார். இளையராஜா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவரது மனைவி 3 மாதம் கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கண்டனிக்கு வந்து தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு சென்ற நிலையில், (13.08.2017) அன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். எம்.பி.ஏ., எம்.பில்., படித்துள்ள இளையராஜாவின் மனைவிக்கு அரசு வேலை கிடைத்திட உதவி செய்யுமாறு அவரின் உறவினர்கள் மஜக பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர்.