காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இளையராஜா குடும்பத்திற்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…!!

image

image

image

சிவகங்கை.ஆகஸ்டு.21., ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை
சேர்ந்த இளையராஜா ஆவார்.

கடந்த 13.08.2017 அன்று இந்திய எல்லையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சகோதரர் இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் இளையராஜாவின் தாயார், சகோதரி, மனைவி ஆகியோரிடம் ஆறுதல் கூறினார்.

இளையராஜா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவரது மனைவி 3 மாதம் கர்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கண்டனிக்கு வந்து தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு சென்ற நிலையில், (13.08.2017) அன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

எம்.பி.ஏ., எம்.பில்., படித்துள்ள இளையராஜாவின் மனைவிக்கு அரசு வேலை கிடைத்திட உதவி செய்யுமாறு அவரின் உறவினர்கள் மஜக பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

அரசு வேலை கிடைக்க அரசாங்கத்தை மஜகவின் சார்பாக வலியுறுத்துவோம் என அவர்களிடம் பொருளாளர் உறுதி  கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சிவகங்கை மாவட்டம்.
21.08.17