மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு..! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

image

image

image

தூத்துக்குடி.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு நேற்று (20.08.2017) மாலை 8 மணி அளவில் மாணம்காத்தான் சமுகநலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

சிறப்புஅழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்புகுழு தலைவர் சையது அலி தலைமையில் பொருப்புகுழு நிர்வாகிகள் காஜா முஹம்மது, ராஜா, முஹம்மது பைசல், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் மற்றும் தூத்துகுடி, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்சியில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சியின் வளர்ச்சி பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். பிறகு மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி
21.08.2017.