You are here

மஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர்களிடம் மனு..!

திருச்சி.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக)
திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று (21.08.2017) காலை 11:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.

மனுவில்..
எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்பரிவார அமைப்புகள் சில இடங்களில் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒலி பெருக்கியினால் அதிக ஒலி எழுப்பி பாங்கிற்குஇடையூறு செய்யும் வகையிலும்,

மற்றும் பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக
ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுக்க இடையூறு ஏற்படாதவன்னமாக பாதுகாப்பு அளித்து சமூக நல்லிணக்கத்தை பேன வேண்டும் எனவும் மஜக சார்பில் அன்போடு வேண்டுகிறோம்.

என மனு அளிக்கப்பட்டது.
உடன் மாவட்ட பொருளாளர்,
துணைச் செயலாளர்கள், அணிநிர்வாகிகள் இருந்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருச்சி மாநகர்.
21.08.2017.