சென்னை.ஏப்ரல்.07.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி சார்பில் இன்று 07-04-2020 சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் மற்றும் Quarantine எனப்படும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
உணவு பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் அஹமத், வடசென்னை மாவட்டச் செயலாளர் அன்வர் மற்றும் துணை செயலாளர் ஓட்டேரி இரசாக் ஆகியோர் சென்னை ஓமந்தூரார் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு.நாராயணன் பாபு அவர்கள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் திரு.ரமேஷ் ஆகியோர் வசம் ஒப்படைத்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னைமேற்குமாவட்டம்
07.04.2020