பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்த குவைத் அரசு ! பாராட்டி குவைத் MKP இஃப்தார் நிகழ்ச்சியில் தீர்மானம்!

ஏப்ரல்:16, மஜக சார்பு வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் தமிழகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

1.குவைத் மன்னருக்கு நன்றி

கொரோனா காலக்கட்டத்தில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்த குவைத் மன்னர் மேதகு நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு இக் கூட்டம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

1. குவைத் அரசுக்கு பாராட்டு

வன்முறையையும், மத வெறுப்பையும் உருவாக்கி தமிழ் சமூகத்தில் பதட்டத்தை தூண்டும் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்த குவைத் அரசுக்கு இக் கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

2. பெரியார் தொண்டருக்கு இரங்கல்

குவைத்தில் தமிழர்களுக்கு மத்தியில் மனித நேய சேவையாற்றி , பெரியார் வழியில் பயணித்து கடந்தாண்டு உயிர் நீத்த பெரியார் பெருந்தொண்டர் ஐயா.செல்லப் பெருமாள் அவர்களின் பணிகளை இக் கூட்டம் நன்றியுடன் நினைவு கூறுகிறது

3. வெளிநாடுகளில் உயிர் நீத்தவர்களின் உடல்களை கொண்டு வரும் போது, சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைக்கும் போக்கு வேதனையளிக்கிறது.

இதை தமிழகத்தில் செயல்படும் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் கவனத்தில் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என இக் கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

4.. உறவுகளை வளர்ப்போம்

குவைத்தில் வாழும் தமிழக மக்கள் அனைவரும் பழமை வாய்ந்த தமிழர் மரபை போற்றும் வகையில் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து பாடுபட வேண்டும் என இக் கூட்டம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

5. மத வெறிக்கு கண்டனம்

இந்திய திரு நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினரின் மீது வன்முறைகளையும், அடக்கு முறைகளையும் தூண்டும் மதவெறி சக்திகளுக்கு இக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

6.இஸ்ரேல் ராணுவத்தின் அத்துமீறலுக்கு கண்டனம்

பாலஸ்தீனத்தில் அக்ஸா பள்ளியில் புனித ரமலான் மாத தொழுகையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பொதுமக்களை தாக்கி அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட. இஸ்ரேல் ராணுவத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு குவைத் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமை ஏற்க, Ktic துணை தலைவர் மவ்லவி முஹம்மது நிஜாமுதீன் பாகவி அவர்கள் நீதிபோதனை வழங்கினார், மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் வரவேற்புரை வழங்க, மண்டல ஆலோசகர் இளையான்குடி சீனி முஹம்மது அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மண்டல IKP செயலாளர் நீடூர் ஹாலிக் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இதில் மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லாஹ், மண்டல துணை செயலாளர்கள் மாயவரம் சபீர் அஹமது, ஏனங்குடி பாஜில் கான், ஆயங்குடி நாசர், கோணுழாம்பள்ளம் அன்சாரி , மண்டல தொழிலாளர் அணி செயலாளர் நெல்லை ஜமால் அலி, மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் திருக்கோவிலூர் சலீம், மண்டல வணிகரணி செயலாளர் SS நல்லூர் யாசின், மண்டல தொழில்நுட்ப அணி செயலாளர் அதிரை அப்துல் சமது, தொழில்நுட்ப அணி துணை செயலாளர், வந்தவாசி நவீத் பாஷா, மண்டல செயற்குழு உறுப்பினர்கள் அதிரை ராஜா, அம்மாபேட்டை அபுதாஹிர், நாச்சியார் கோயில் சுல்தான், நாகை இபுறாஹிம், லால்பேட்டை முஜம்மில், நாச்சிகுளம் அப்துர் ரஹ்மான், வேலம்புதுகுடி சர்புதீன், இலங்கை மன்சூர், தஞ்சை ஜாஹிர், பல்வேறு கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#Mkpitwing
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#குவைத்_மண்டலம்

15.04.2022