நாகை.செப்.21., நாகை அரசு பொது மருத்துவமனைக்கு தமிமுன் அன்சாரி MLA வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வையிட்டு அவை தூய்மையாக பராமரிக்க படுவதற்காக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்களிடம் தேவையான கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 21_09_17
தமிழகம்
தமிழகம்
காரைக்கால் நகராட்சி ஆனையாளரிடம் மஜக புகார் மனு!
காரைக்கால்.செ.21., நேற்று காரைக்கால் நகராட்சி ஆணையாளரை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் கோரிக்கை மனுவாக காரைக்காலில் பேனர் வைக்க தடை சட்டம் இருந்தும் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையூராகவும், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு காரணமாக தற்போது அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது, ஆதலால் இடையூறாக இருக்கும் பேனர்களை உடனே அகற்ற வேண்டும். எனவும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணமாக சாலைகளில் திரிந்து கொண்டு இருக்கும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் A.R.பாவா பஹ்ருதீன், மாவட்ட பொருளாளர் A. அப்துல் பாசித், மாவட்ட துனை செயலாளர் ஹாஜா பகுருதீன், குலாம் ரசூல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காரைக்கால்_மாவட்டம் 20_09_2017
மஜக திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
திண்டுக்கல்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி, கொள்கை விளக்க அணி துணைச்செயலாளர் C.A.சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் A.அபி இரயில்வே, A.அப்துல் காதர் ஜெய்லானி, S.சரவணன், R.உமர் அலி, மருத்துவ அணி செயலாளர் B. காதர் ஒலி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் R.M.குத்புதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, வர்த்தக அணி பாபு (மாஸ்ட்டர்), நகர பொறுப்பு குழு நிர்வாகிகள், ஆட்டோ ஒட்டுநர் சங்க நிர்வாகிகள், வேடசந்தூர், வடமதுரை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) எச் ராஜாவை -சாரணர் இயக்க தேர்தலில் தோற்க்கடித்த ஆசிரியர் பெருமக்களை பாராட்டுகிறோம், வெற்றி பெற்ற ஆசிரியர் மணி அவர்களை இக்கூட்டத்தின் சார்பாக பாராட்டுகின்றோம். 2) மியான்மார் வாழ் மக்களுக்காக அனைத்து சமுக மக்களையும் பெரும் திரளாக திரட்டி மிகப் பெரிய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3) பொதுக்கூட்டத்திற்க்கு கண்டன உரை ஆற்ற வருகைதரும் மூன்று MLA _க்களுக்கும் சிறப்பு வரவேற்பு அளிப்பதெனவும், பிளக்ஸ், சுவர் விளம்பரங்கள் செய்வதெனவும் இக்கூட்டத்தில்
நாகையில் முதல்வரை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல்!
#பேரறிவாளனுக்கு_பரோலை_நீடிக்க_வேண்டும்! #ஆயுள்_தண்டனை_கைதிகளை_முன்விடுதலை_செய்ய_வேண்டும்! #நாகையில்_முதல்வரை_நேரில்_சந்தித்து_தமிமுன்_அன்சாரி_MLA_வலியுறுத்தல்! நாகை. செப்.20., MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் வருகை தந்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பயணியர் மாளிகையில் முதல்வரை சந்தித்து M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேரளிவாளனுக்கு பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுவையும் கொடுத்து, அது குறித்து விவாதித்தார். பேரளிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து,சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து வேகமாக பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், இதில் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்படி பாரபட்சமின்றி நடப்போம் என்றும் முதல்வர் கூறினார். பிறகு நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் வழங்கினார். நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்திட வேண்டும், நாகப்பட்டினத்திற்கு மருத்துவக் கல்லூரியை உருவாக்கி தரவேண்டும், நாகூர், பனங்குடி, பட்டினச்சேரி மக்களை பாதிக்கும் "மார்க்" துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்,நரிமணம்-உத்தம சோழபுரம் அருகே வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டவேண்டும்,
மஜக மத்திய சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
சென்னை.செப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிக மக்களை பங்கேற்க செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் சமீம் அஹமது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்தனர். இதில் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம் 20.09.17