தஞ்சை.நவ.15., தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் கருப்பூரில் மஜக கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்கு திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் உஸ்மான் அலி அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் மாவட்ட துணைச்செயலாளர் பரகத்துல்லாஹ் அவர்கள் மாவட்ட துணைச்செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் பாபநாசம் ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம் அவர்கள் சிக்கல்நாயகன் பேட்டை ஹனஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆற்றவேண்டிய மக்கள் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் தெளிவாக உரையாற்றினார். இறுதியாக கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. செயலாளர் ஹாஜா மைதீன், பொருளாளர் அகமது உஸ்மான். துணைச்செயலாளர்களாக உபைஸ்கரீம் புர்ஹான், முகம்மது யாசர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தஞ்சை_வடக்கு_மாவட்டம் #15_11_17
தமிழகம்
தமிழகம்
நடிகர் விஜய்க்கு குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது..! மாணவர் இந்தியா
சென்னை.நவ.15., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பாக அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் தற்கொலையில் ஆதாரங்கள் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசையும், காவல்துறையும் கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில், தோழர் அன்புவேந்தன், ஃபெலிக்ஸ், திருமுருகன் காந்தி, இயக்குனர் பா.ரஞ்சித் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு மாணவர் முன்னணி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கண்டன உரையாற்றிய மாநில செயலாளர் அஸாருதீன் சோற்றுக்காக மதம் மாறவில்லை சுய கௌரவத்திற்காக மாறினேன் என்று மாணவர் வாக்குமூலம் கொடுத்து தற்கொலை செய்யும் அளவுக்கு கல்லூரி பேராசியர்களின் மனதில் மதவெறி புகுந்துள்ளது ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறினார். மேலும் இப்படி கல்வியிலும், ஆசிரியர்களும் ஒரு சேர்ந்து குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக செயல்படுவது எஜமான் மோடியின் திருப்தியை பெற்று பதவி சுகம் அடைய செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிவதாக குற்றம் சாட்டினார். ஜோசப் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது என்று பதிவு செய்தார். இதற்குள் இருக்கும் மத அரசியலை
இது குழந்தைகள் தினம்…! குழந்தைகளுடன் கூடி மகிழ்ந்த நாகை MLA!
நாகை தொகுதிக்குட்பட்ட ப.கொந்தகை என்ற கிராமத்தில் அரசு உதவிப்பெறும் மதாரியா தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அப்பள்ளிக்கு திடிர் வருகை மேற் கொண்டார் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி! தலைமையாசிரியை விமலா மேடம் அவர்களும், ஆசிரியைகளும், பிள்ளைகளும் அவரை வரவேற்றனர். 1914 ல் O.M உசேன் மரைக்காயர் வாப்பா என்பவர் தான் இடம் கொடுத்து இதை உருவாக்கி 50 ஆண்டுகள் நிர்வாகித்திருக்கிறார். இன்று அவரது மகன் சேக் தாவூது என்பவர் வழி நடத்துகிறார். இப்பள்ளிக்கு வயது 104 ஆகிறது. அரசு உதவிப்பெறும் பள்ளியாக இருந்தாலும், அது தனியார் பள்ளிப் போல தரத்துடன் பிள்ளைகளை உருவாக்கி வருகிறது என்பதுதான் அதன் சிறப்பம்சமாகும். அழகான சீருடை, ஷீ, நல்ல கல்வி என தாழ்வு மனநிலை ஏற்படாத வகையில் பிள்ளைகளை ஆசிரியர்கள் பாதுகாக்கிறார்கள். MLA அவர்கள் அந்த மாணவிகளை அழைத்து, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை வாசிக்க சொன்னார். அந்த பிள்ளைகள் பிழையின்றி வாசித்தனர்கள். பொது அறிவு, அரசியல் ஆகியவற்றையும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து போன்ற ஆங்கில தினசரிகளையும் வாசிக்க வைக்கிறார்கள்! அங்குள்ள பிள்ளைகளிடம் நான் யார் வந்திருக்கேன் தெரியுமா ? என்றதும், நீங்கள்தான்
தமிழக கவர்னரின் செயல் மரபுகளை மீறியது! தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை…
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA,மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டு அறிக்கை) கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரபுகளை மீறி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசும்,முதல்வரும் இருக்கும்போது அந்த மாவட்ட அமைச்சர் திரு SP வேலுமணி யைக் கூட அழைக்காமல் கவர்னர் இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திருக்கிறார். கவர்னர் என்பவர் மாநில ஆட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் என்ற எல்லையை தாண்டி செயல்படுவதை ஏற்க முடியாது. புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு போட்டியாக அங்கு கவர்னர் கிரேண்பேடி நீயா ? நானா ? என செயல்படுவதால் அங்கு இரட்டை தலைமைத்துவம் உருவெடுத்து நிர்வாகம் குழப்பத்திற்குள்ளாகிருக்கிறது. இரட்டை தலைமைத்துவம் என்பது நிர்வாக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கையாண்ட யுக்தியை,தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவுப்படுத்தி,மாநிலங்களின் எஞ்சி நிற்கும் உரிமைகளையும் கபளிகரம் செய்யும் திட்டமாக இதனை பார்க்க வேண்டியிருக்கிறது. மாநில சுயாட்சிக்கான முழக்கங்கள் வலுப்பெற்று வரும் நிலையில்,தமிழக கவர்னரின் சர்வாதிகார போக்கை தமிழக அரசும்,முதல்வரும் மெளனமாக வேடிக்கைப் பார்ப்பது
ஆம்பூர் நகர மஜக ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.நவ.15., ஆம்பூரில் நடைபெறவிருக்கும் மத நல்லிணக்க மக்கள் திரள் பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆம்பூரில் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் M. ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நயீம், முஹம்மது முஸரப் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வரும் மாநில நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 14-11-2017