கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு . (பகுதி -11) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு ஓடுகிறது . மழை காலங்களில் நதிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே உத்தமசோழபுரம் / நரிமணம் அருகே தடுப்பணை ஒன்றை கட்டினால் நதிநீர் சேமிக்கப்படும் . இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் . 45 வருவாய் கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் . எனவே இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் . இவ்வாறு நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார் . நாகை மக்களின் நீண்டகால கோரிக்கை இப்போது சட்டசபையில் எதிரொலித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் , இதில் மிஞ்சும் தண்ணீரை பனங்குடி ஏரியில் சேமித்து , அதிலிருந்து கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் . மேலும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் , காரிய அமிலம் பாதுகாக்கப்பட்டு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும் . இப்பகுதியில் ONGC நிறுவனம் ஆழ்துளையிட்டு
தமிழகம்
தமிழகம்
ஆர்.கே. நகர் இடைதேர்தல் மஜக நிர்வாகிகள் ஆலோசனை
சென்னை.மார்ச்.29., ஆர்.கே. நகர் இடைதேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செய்ய வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது M.com அவர்கள் தலைமை தாங்கினார். வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளுர் கிழக்கு, திருவள்ளுர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்ட முடிவில் அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு TTV.தினகரன் அவர்களை வெற்றிபெற வைக்க மஜக தொண்டர்கள் திட்டமிட்டு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என முடிவெடுக்கபட்டது. தகவல் : தேர்தல் பணிக்குழு, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி. 29.03.2017
மத்திய அரசு விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தடைசெய்ய வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக தலைநகர் டெல்லியில் தோழர். அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாட்டை கடந்தும், இந்தியாவெங்கும் கூர்ந்து கவனிக்ககூடிய போராட்டமாக இப்போராட்டம் மாறியிருக்கிறது. விவசாயிகளின் விசயத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகமெங்கும் விவசாயிகளிடம் கோப அலைகள் பறவி கொண்டிருக்கின்றன. இவர்களை அலட்சியம் செய்யாமல், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 29.03.17.
காவிரி உரிமை மீட்புக் குழு போராட்டக் களத்தில் மஜக விவசாய அணி செயலாளர்!
தஞ்சை.மார்ச்.29., இன்று தஞ்சசவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதிம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அதன் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திர்க்கு ஆதரவு தெரிவித்து பேசினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாலர் ஜப்பார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம். 28.03.17
அனைத்து விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் ! சட்டப்பேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு …
(பகுதி – 10) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் பொது விவாதத்தின் மீது பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . பேரவைத்தலைவர் அவர்களே … இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடிக்கு பயிர்கடன் தரப்படும் என கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது . உணவுதானிய உற்பத்தியை ஒருகோடி டன்னாக உயர்த்துவது என்று இலக்கு நிர்ணயித்திருப்பது பாராட்டத்தக்கது. 35 ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடியை நுன்னீர் பாசனத்திற்கு மாற்றுவது , 57 சதவீதமாக இருக்கும் தமிழகத்தின் மானாவாரி சாகுபடியை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை அறிவித்திருப்பது , தோட்டக்கலை சாகுபடி பரப்பை அதிகரிப்பது , பண்ணைகளை இயந்திரமாக்குவது என விவசாயத்திற்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது . இது விவசாயிகளின் மீது அக்கறைக்கொண்ட அரசு கடந்தாண்டு மழையில்லாமையாலும் , ஆற்று நீர் கிடைக்காமலும் , வறட்சி காரணமாகவும் பெரும் பாதிப்புக்கு விவசாயிகள் ஆளாகியிருக்கின்றனர். அனைத்து சிறு , குறு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்தது போல , அனைத்து விவசாயிகளுக்கும் அதேபோல சலுகைகளையும் உதவிகளையும் செய்திட வேண்டும் என இந்த மாமன்றத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதுபோல விவசாய