அனைத்து விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் ! சட்டப்பேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு …

image

(பகுதி – 10)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் பொது விவாதத்தின் மீது பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

பேரவைத்தலைவர் அவர்களே …

இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடிக்கு பயிர்கடன் தரப்படும் என கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது .

உணவுதானிய உற்பத்தியை ஒருகோடி டன்னாக உயர்த்துவது என்று இலக்கு நிர்ணயித்திருப்பது பாராட்டத்தக்கது. 35 ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடியை நுன்னீர் பாசனத்திற்கு மாற்றுவது , 57 சதவீதமாக இருக்கும் தமிழகத்தின் மானாவாரி சாகுபடியை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை அறிவித்திருப்பது , தோட்டக்கலை சாகுபடி பரப்பை அதிகரிப்பது , பண்ணைகளை இயந்திரமாக்குவது என விவசாயத்திற்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது .

இது  விவசாயிகளின் மீது அக்கறைக்கொண்ட அரசு கடந்தாண்டு மழையில்லாமையாலும் , ஆற்று நீர் கிடைக்காமலும் , வறட்சி காரணமாகவும் பெரும் பாதிப்புக்கு விவசாயிகள் ஆளாகியிருக்கின்றனர்.  அனைத்து சிறு , குறு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்தது போல , அனைத்து விவசாயிகளுக்கும் அதேபோல சலுகைகளையும் உதவிகளையும் செய்திட வேண்டும் என இந்த மாமன்றத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அதுபோல விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகள் கேட்டிருக்கும் மின் இணைப்புகளையும் உடனடியாக வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .

இவ்வாறு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார்.

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
28-03-2017