சேலம்:டிச.11.,
சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சேலம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் மாவட்ட செயலாளர் M.A. மகபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் O.S. பாபு மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜக வினர் முன்னெடு த்துள்ளனர்.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் காஜா, இளைஞர் அணி பொருளாளர் யாசர், மருத்துவ சேவை அணி செயலாளர் ஹஸுன், மருத்துவ சேவை அணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தஸ்தகீர், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அஷ்ரப், மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
11.12.2020