டிச 11,
கோவை மாவட்டத்தில் சாந்தி சோஷில் சர்வீஸ் என்ற அறக்கட்டளை நிறுவனர் அய்யா சுப்ரமணியம் இன்று இறந்தது கோவை மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மஜக துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக ஏழை எளியோர்க்கு உணவு வழங்குதல் , கல்வி உதவி, மருத்துவ உதவி, வழங்குதல் போன்ற சேவைகளை துவங்கி குறைந்த கட்டணத்தில் மருத்துவமனையை உருவாக்கி, ஏழை எளியோருக்கு உதவுவதன் மூலம் கோவை மாவட்டத்தில் சமூக சேவையில் மாபெரும் புரட்சி செய்த சிங்காநல்லூர் சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் அய்யா சுப்பிரமணியம், அவர்கள், மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துவதாக கூறியுள்ளார்.
அவரது குடும்பத்தாருக்கும், நிறுவன ஊழியர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
11.12.2020