டிச 11,
மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் கிராமம் கொள்ளிடம் ஆற்றுக் கரையில் உள்ளது.
புரெவி புயல் காரணமாக தொடர் மழையால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
அங்கு மஜக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து நிவாரணப் பணியாற்றி வருகின்றனர்.
இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அங்கு 250 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
அவர்கள் அனைவரும் மஜக பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு வாரமாக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளை நெகிழ்ச்சியுடன் கூறினர்.
ஒவ்வொரு மஜக நிர்வாகியின் பெயர்களையும் கூறி நன்றி பாராட்டினர்.
தங்களுக்கு வடிகால் வசதி, சாலை வசதி , மின் வசதி, பட்டா ஆகியவை குறித்து கேட்டனர்.
அங்கிருந்தவாரே, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி அவர்களிடம் தொடர்பு கொண்டு, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கூறினார்.
நாளை அங்கு நேரில் வருகை தந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
பின்னர் மஜக பேரிடர் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து புறப்பட்டார்.
அவருடன் மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சங்கை. தாஜ்தீன், நாகை மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் தைக்கால் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், அசேன் அலி, நீடூர் மிஸ்பாஹுதீன், கொள்ளிட ஒன்றிய செயலாளர் ஹலில் ரஹ்மான், ஒன்றிய துணை செயலாளர் அன்சர் அலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முஹம்மது ரியாஸ், கிளை பொருப்பாளர்கள் ஷேக் முகம்மது, மன்சூர் அலி கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
11.12.2020