(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை) நெல்லை மாவட்டம், பணகுடி அருகே இஸ்ரோ மையம் (ISRO CENTRE) அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பல கிலோ மீட்டர் தொலைவில் வெடிச்சத்தம் கேட்டதாக சுற்று வட்டார மக்கள் உணர்ந்துள்ளனர். அப்பகுதியில் பாறை பிளவுகள் ஏற்ப்பட்டதாக செய்தியை அறிந்த புதிய தலைமுறை ஊடகவியலாளர் ராஜாகிருஷ்ணன் அவர்களும், தினகரன் செய்தியாளர் ஜெகன் அவர்களும் அப்பகுதிக்கு சென்று செய்தியை சேகரித்து வெளியிட்டுள்ளனர். மகேந்திரகிரி மலையில் வெடிப்பு சத்தம் கேட்ட தகவல் உண்மையா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய பணகுடி காவல்துறை ஆய்வாளர் அவர்கள், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்திய போது, மத்திய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே வழக்குகளை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தமிழக ஆட்சியாளர்கள் மீது ஐயத்தையும், அதிர்ச்சியைம் ஏற்ப்படுத்தியுள்ளது. இது விஷயமாக ஊடகவியாளர்கள்
தமிழகம்
தமிழகம்
பரங்கிப்பேட்டையில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!
கடலூர்.செப்.27., இன்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு இன்று வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பரங்கிப்பேட்டை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், மாநில துணைச் செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் உள்ளிட்டோர் உடன் வருகை தந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்று மூன்று இடங்களில் மஜக கொடி ஏற்றப்பட்டது. பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA இரண்டு இடங்களிலும், மாநில செயலாளர் தஜூதீன் ஒரு இடத்திலும் கொடியை ஏற்றிவைத்தனர். கடைவீதிகளில் ஊர்வலமாக சென்ற போது ஆங்காங்கே பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் இடைமறித்து பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறகு பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் பொதுச்செயலாளர் அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகளை மனம்திறந்து பாராட்டினர். மேலும் மத்திய NIA உளவுத்துறையால் பரங்கிப்பேட்டை பொதுமக்கள் அடிக்கடி தொந்தரவுக்கு ஆளாவதாகவும் புகார் கூறினர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் பதிலளித்தார். அதன் பிறகு மக்ரிப்
ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…!
கடலூர்.செப்.27., இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவர் மொளலானா A.E.M அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் இல்லத்திற்கு சென்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ சந்தித்து உரையாடினார். நடப்பு அரசியல் சூழ்நிலைகளை கையால்வது குறித்தும், சமுதாய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்தனர். மஜகவின் மீது ஹஜ்ரத் அவர்கள் காட்டும் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக பொதுச்செயலாளர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மொளலா நாசர், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுத்தின், மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர் _தெற்கு_மாவட்டம்.
மஜக நன்கொடை சேகரிப்பு திட்டம்…! கடலூர் தெற்கு மாவட்டத்தில் முதல் கட்ட வசூல் தொடக்கம்…!!
கடலூர்.செப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் கட்சி வளர்ச்சி நிதிக்காக நன்கொடை சேகரிப்பு திட்டம் ஆகஸ்ட் 1 அன்று தொடங்கப்பட்டு, தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று கடலூர் (தெற்கு) மாவட்டத்தில் முதல் கட்ட வசூல் லால்பேட்டையில் தொடங்கியது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் மாநில விவாசய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அராபாத், அபுதாபி மண்டல தலைவர் அய்யூப், அபுதாபி மண்டல துணைச் செயலாளர் ஹக்கீம், லால்பேட்டை நகரச் செயலாளர் ஜாகிர், நகர நிர்வாகிகள் - யூனூஸ், ரிஸ்வான், மாணவர் இந்தியா மவட்ட செயலாளர் முஸரப், துபாய் மண்டல நிர்வாகி முஸ்தபா ஆகியோர் பங்கேற்றனர். நாகை (தெற்கு), திருவாரூர், தஞ்சை(தெற்கு), ஈரோடு கிழக்கு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது கடலூர்(தெற்கு) மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. தகவல்:- #மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி #MJK_IT_WING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்தில் மஜக மாநில நிர்வாகிகள்…!
கடலூர்.செப்.27., கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்திற்க்கு நேரில் சென்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இவர்களுடன் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், அபுதாபி மண்டல செயலாார் தையுப், பொருளாலர் ஹக்கிம், மாஜக லால்பேட்டை நிர்வாகிகள் ஜாகிர், ஜாபர் சாதிக், மற்றும் மானியம் ஆடுர் நிர்வாகி பைரோஸ் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #கடலூர்_தெற்கு_மாவட்டம்.