நெல்லையில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்..! மஜக கடும் கண்டனம்.!!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே இஸ்ரோ மையம் (ISRO CENTRE) அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பல கிலோ மீட்டர் தொலைவில் வெடிச்சத்தம் கேட்டதாக சுற்று வட்டார மக்கள் உணர்ந்துள்ளனர்.

அப்பகுதியில் பாறை பிளவுகள் ஏற்ப்பட்டதாக செய்தியை அறிந்த புதிய தலைமுறை ஊடகவியலாளர் ராஜாகிருஷ்ணன் அவர்களும், தினகரன் செய்தியாளர் ஜெகன் அவர்களும் அப்பகுதிக்கு சென்று செய்தியை சேகரித்து வெளியிட்டுள்ளனர்.

மகேந்திரகிரி மலையில் வெடிப்பு சத்தம் கேட்ட தகவல் உண்மையா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். 

இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய பணகுடி காவல்துறை ஆய்வாளர் அவர்கள், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்திய போது, மத்திய பாஜக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே வழக்குகளை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தமிழக ஆட்சியாளர்கள் மீது ஐயத்தையும், அதிர்ச்சியைம்  ஏற்ப்படுத்தியுள்ளது.

இது விஷயமாக ஊடகவியாளர்கள் மீது தொடுத்த பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்று, ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமென்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

செய்தி வெளியிட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து மிரட்டுவது நியாயமில்லை. இதை கண்டித்து அமைதி வழியில் போராடிய ஊடகவியலாளர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு மிரட்டபட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு வழக்குகளைத் திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

இவண்:-
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.