வேலூர்.அக்.15,. மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு தலைமையின் மூலம் புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. புதிய உத்வேகத்தோடு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாவட்டம் ழுழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிவருகின்றனர். பொறுப்புக்குழு உறுப்பினர் ஆம்பூர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் நகரம் முழுவதும் கிளைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் இரண்டாம் பகுதியாக 24 வார்டு பகுதியை சார்ந்த சகோதரர் நபீஸ் தலைமையில் சில சகோதரர்கள் உறுப்பினர் படிவத்தை நிரப்பி தன்னேழுச்சியாக மஜகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். #ஆம்பூரில்_மஜக_விறுவிறுப்பாய் #களப்பணிக்கு_தயாராகிவருகிறது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம் 14.10.17
தமிழகம்
தமிழகம்
நாச்சிகுளத்தில் மஜகவின் இரண்டாவது நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருவாரூர்.அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை இனைந்து நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜகவின் கிளை செயலாளர் ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகுத்தார். நாச்சிகுளம் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வந்த ஜமாத்தார்கள் அனைவருக்கும் குவைத் பேரவையின் துணை தலைவர் ஜெ.அப்துல் ரஹ்மன் அவர்களும், சமூக ஆர்வலர் நாச்சிகுளம் ரசீது அவர்களும் நிலவேம்பு கசாயம் வழங்கி உபசரித்தனர். இதில் மஜக தொண்டர்களும், ஜமாத்தார்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன் பெற்றனர். #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம்_கிளை 13/10/2017
ஆம்பூரில் மனிதநேய பணி ! நீண்ட நாட்களுக்கு பிறகு நிரம்பியது பாலாறு..! கரையோர வீடுகளில் புகுந்த வெள்ளம்..
ஆம்பூர்.அக்.13., வேலூர் மாவட்டம், கர்நாடக மற்றும் ஆந்திர எல்லை ஓர மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதி மற்றும் துத்திப்பட்டு ஊராட்சி பகுதிகளில் உள்ள 100 - க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர். ஆற்றின் கரையோரம் வீடுகட்டி வசிக்கும் ஏழை மக்கள், தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். வெள்ளம் இன்னும் அதிகமாகலாம் என்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாலாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களை #மஜக ஆம்பூர் நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர் #வேலூர்_மேற்கு_மாவட்டம்.
மஜக நாகை நகரம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு…
நாகை. அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுரையின் பேரில் நாகை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நாகை நகரம் முழுவதும் "டெங்கு விழிப்புணர்வு" துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. நகர செயலாளர் M.சாகுல் ஹமீது தலைமையில் மஜக செயலவீரர்கள் மஜக டீசர்ட் அணிந்து மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். இதில் நகர துணை செயலாளார் M.அமீருதீன், M.L.A அலுவலக செயலாளார் சம்பத், மாணவர் இந்தியா நகர செயலாளார் K.முஹம்மது அசாருதீன், மாணவர் இந்தியா துணை செயலாளார் H.சுலைமான் அனாஃப், 25வது வார்டு செயலாளார் A.செமீர்தீன், நகர தொழில் நுட்ப அணி செயலாளார் S.முஹம்மது ஹனிஸ் தீன், நகர தொழிற்சங்க துணை செயலாளார் செல்லதுரை என்கிற அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம். 13.10.17
அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்திற்கு இல்லாத நெருக்கடியா எடப்பாடி அரசு சந்தித்துவிட்டது?- மாணவர் இந்தியா கேள்வி…
சென்னை.அக்.12., தோழர் வளர்மதியை பெரியார் பல்கலைக்கழகம் தேர்வெழுத அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வளர்மதி தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் தன் மீது அடக்குமுறைகளை ஏவுவதாகவும், மற்ற மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக தன்னை தேர்வெழுத அனுமதி மறுப்பதாகவும், தன்னை தேர்வெழுத பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும் என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மாணவர்களை போராட்ட களங்களுக்கு வரவிடாமல் தடுக்கவே இதுபோன்ற அடக்குமுறைகளை அரசாங்கமும், பல்கலைக்கழகமும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடக்கவில்லை என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டுமென்று கூறினார். டெல்லியிலும், கேரளாவிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஏன் மாணவர் சங்க தேர்தல் நடக்கவில்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் சந்திக்காத நெருக்கடியையா எடப்பாடி அரசு சந்தித்துவிட்டது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் "இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தை கணக்கிலெடுக்காமல் அதற்குப் பிறகான